Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக் கை குழு கூறியது.
இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெ க்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இன்று மீண்டும் அதன் விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி ஏ.கே. கங்குலி ஒதுக்கீடு பெற்ற டாடா டெலி சர்வீஸ், ஷியாம், வீடியோகான், எடிசலாட், யுனினார், புஷ்நெட், வோடா போன் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
இதே போல் மத்திய அரசு மற்றும் மத்திய டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 1-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)
மேலும் இதன் தொடர்புடைய முந்தைய செய்திகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: