Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டாடா மேஜிக்’ வாகனங்களுக்கு பர்மிட்: சட்டசபை கேள்வி நேரத்தின் போது . . . – அமைச்சர்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பால பாரதி பேசும்போது, “சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், “டூரிஸ்ட் பர்மிட்’ வாங்கியுள்ள “டாடா மேஜிக்’ வாகனங்கள், பயணிகள் போக்குவரத்திற்கு பயன் படுத்தப்படுகிறது. இதனால், ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்’ என்றார். இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு அவர்கள், ஐதாராபாத் மற்றும் பெங்களூரு, ஆகிய‌ நகரங்களில் 80 ஆயிரம் ஆட்டோக் களுக்கு, “பர்மிட்’ கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், சென்னையில் 40 ஆயிரம் ஆட்டோக்களுக்கு மட்டுமே “பர்மிட்’ கொடுக்கப் பட்டிருந்தது. இந்த ஆட்சியில் கூடுதலாக, 20,000 ஆட்டோக்களுக்கு இலவச “பர்மிட்’ வழங்கப்பட்டிரு க்கிறது. ஆனால்  கடந்த ஆட்சியில், ஷேர் ஆட்டோக்களுக்கு “பர்மிட்’ கொடுக்கப் பட்டது போலவே, டாடா மேஜிக் வாகனங்களுக்கு, பொது மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த டாடா மாஜிக் வாகனங்களுக்கு முறையாக “பர்மிட்’ கொடுத்து, முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தெரிவித்தார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: