Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேஸ்புக்+தகவல்+தரவிறக்கம்

நண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது. பலர் தங்களு டைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப் போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகிய வற்றை இதில் போட்டு வைக்கின்றனர். இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக் கின்றனர். இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண் ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள். உள்ளே நுழைந்த பின்னர், Account என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Learn More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் கீழிருந்து இரண்டாவதாக உள்ள Download Your Information என்பதில் கிளிக்கிடவும். நீங்கள் எது குறித்து கிளிக் செய்கிறீர்கள் என்பது குறித்து சிறிய விளக்கம் ஒன்று தரப்படும். இங்கு Download என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களும் திரட்டப்பட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் நீங்கள் தந்துள்ள இமெயில் முகவரிக்கு, நீங்கள் விரும்பிய தகவல்கள் அடங்கிய சுருக்கப்பட்ட ஸிப் பைல், டவுண்லோட் செய்திடத் தயாராய் இருப்பதாக செய்தி கிடைக்கும். இங்கு கிளிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை அடையாளம் உறுதி படுத்த பெறப்பட்ட பின், ஸிப் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். படங்கள், போட்டோக்கள், பைல்கள் என அனைத்தும் சுருக்கப்பட்ட பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.

(கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: