Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொங்கல் பையில் சூரியன்: அ.தி.மு.க. குற்றச்சாட்டு: அமைச்சர் விளக்கம்

சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுமணி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் சரியான திட்டங்கள் இல்லாததால் சாலை விபத்துகள் அதிகமாகி உள்ளது. இலவச திட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில்தான் கொடுக்கப் படுகிறது. ஆனால் இலவச பொங்கல் பையில் கூட உங்கள் கட்சி சின்னத்தை போட்டு கொடுக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அப்படி செய்யவில்லை.
அமைச்சர் எ.வ.வேலு: இலவச பொங்கல் பையில் உதயசூரியன் இருப்பதாக தவறான தகவலை கூறுகிறார். பொங்கல் வைக்கும்போது மக்கள் சூரியனைத்தான் வணங்கு வார்கள். எனவே அந்த சூரியன் வேறு, தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் வேறு.
கட்சியின் சின்னம் என நினைத்து உறுப்பினர் கூறுகிறார். அது தவறு.
செங்கோட்டையன் (அ.தி. மு.க.):- பொங்கலை மாலை நேரத்தில் நிலாவை பார்த்துதான் வைப்பார்கள்.
அமைச்சர் வேலு:- பொங்கல் என்றாலே காலை நேரத்தில் சூரியனை பார்த்து வணங்கி கும்பிடுவதுதான் தமிழர்களின் நீண்டகால பண்பாடு.
செங்கோட்டையன்:- மாட்டுப்பொங்கலை மாலை நேரங்களில் வைப்பதுதான் வழக்கம்.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:- முதல்நாள் பொங்கல் வைக்கும்போது சூரியனைப் பார்த்துதான் வணங்குவார்கள். மறுநாள்தான் மாட்டுப்பொங்கல். நீங்கள் ஏன் ராத்திரியிலேயே இருக்கிறீர்கள். வெளிச்சத்திற்கு வாங்க.
அமைச்சர் பொன்முடி:- நாங்கள் மனிதர்களை பற்றி நினைக்கிறோம். செங்கோட்டையன் மாட்டுப் பொங்கலைப் பற்றி பேசுகிறார்.
அமைச்சர் மைதீன்கான்:- அ.தி.மு.க. ஆட்சியின்போது நடந்த விளையாட்டுப் போட்டிகளில் பரிசு அளிக்கும்போது ஜெயலலிதா படத்தை போட்டுத்தான் கொடுத்து இருக்கிறீர்கள்.
தங்கமணி (அ.தி.மு.க.):- மாட்டுப்பொங்கல் மாலையில் வைப்பது. அதைத்தான் செங்கோட்டையன் சொன்னார். இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்கள்.
ஆனால் சிமெண்ட், கம்பி விலை உயர்வால் அதை கட்டி முடிக்க ரூ.1 1/2  லட்சம் ஆகிறது. நீங்கள் கொடுக்கும் செக் பாங்கியில் கொடுத்தால் திரும்பி வருகிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- “செக்” திரும்பி வந்ததாக தவறான குற்றச்சாட்டை கூறுகிறார். அப்படி இதுவரை எந்த புகாரும் இல்லை.
தங்கமணி:- நாளை நான் ஆதாரத்தை தருகிறேன். பாங்கிக்கு சென்று செக்கை கொடுத்தால் நாளை வா, நாளை மறுநாள் வா என இழுத்தடிக்கிறார்கள்.
அமைச்சர் பொன்முடி:- ஆசிரியர்களுக்கு எதை கொடுத்தாலும் குறை கூறுவது உங்கள் பழக்கமாகிவிட்டது. கூரை வீட்டில் குடியிருக்க வேண்டாம் என்ற நல்ல நோக்கத்துடன் மக்களுக்காக ஒரு நல்ல திட்டத்தை கலைஞர் கொண்டு வந்துள்ளார்.
ரூ.75 ஆயிரம் போதாது என கருதி ரூ.20 ஆயிரம் வட்டியில்லா கடனாகவும் கொடுக்க சொல்லி உள்ளோம்.
தங்கமணி:- வீடுகட்ட மேலும் பணம் தேவைப் படுவதால்தான் கந்து வட்டிக் காரர்களிடம் அலையும் நிலை உருவாகி உள்ளது. இன்று விலை வாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறீர்கள்.
ஆனால் சர்க்கரை ரூ.32, மஞ்சள் ரூ.25, தேங்காய் எண்ணை ரூ.200, பூண்டு ரூ.240-க்கு விற்கிறது. விலைவாசியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆதிதிராவிட அமைச்சரின் தொகுதியிலல் உள்ள பந்தய திடல் விடுதி மிக மோசமான நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: