Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வயிற்றில் எரிச்சலும், சிகிச்சையும்

பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், பொரு மல், வயிற்றைப் பிசைதல், இறுக்கிப் பிடித்தல், வயிற் றில் வலி, உப்புசம், வயிற் றுப் போக்கு, மலச்சிக்கல் இன்னும் இது போன்ற பிரச்னைகள் அசெüக ரியங்கள் ஏற்படுவது சகஜம்.  இந்தப் பிரச்னை சிலருக்கு அவ்வப் போது ஏற்படுவதும் மறை வதுமாக இருக்கும். சிலருக்கு வரவே வராமலும் போகலாம். சிறுகுடல் பெருங் குடல் பகுதி முறையாக சுருங்கி விரிவடையும் தன்மை யுடையவை. இதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுதான் இந்தப் பிரச்னைகளைக் கொண்டு வருகிறது.  எனினும் மிகச் சரியான காரணத்தை அறுதியிட்டுக் கூறவும் முடியாது. மேற்கத்திய மருந்து களின் அறிகுறிகள் அடிப்படை யில் மலச் சிக்கலுக்கும், உப்பு சத்திற்கும், எரிச்சலுக்கும் வயிற்றுப் போக்கிற்கும் மருந்து களையும் சிகிச்சைகளையும் வழங்குகிறது. ஆன்டிபயாட்டிக் மருந்துகள், மலமிளக்கி மருந்து களையும் வழங்குகிறது. உணவு முறை, கால இடைவெளி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டாலே சிலருக்கு பிரச்னைகள் நீங்கி விடும்.  அறிகுறிகளைக் கொண்டு மருத்துவம் பார்ப்பது நிரந்தர தீர்வா காது.  அக்குபஞ்சர் உதவும்: ஜீரணத்துக்கு முக்கியமான உறுப்புகளான கல்லீரலிலும், கணையத்திலும் சக்தி ஓட்டம் தடைப்பட்ட நிலையிலே யேதான் பெரும்பாலான வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படு கின்றன.  கல்லீரலில் ஏற்படும் தடை, வயிறு உப்புசம், மலச்சிக்கல், ஏப்பம், எரிச்சல், மனச்சோர்வு ஏற்படுத்தும். கணையத்தில் ஏற்படும் தடை, களைப்பு, வயிற்றுப் போக்கு ஆகிய வற்றை ஏற்படுத்தும். கல்லீரலிலும் கணைய த்திலும் ரத்த ஓட்டத்தை அக்குபஞ்சர் சீர்படுத்துகிறது. இதனால் ஜீரண மண்டல த்தில் உணவு இருக்க வேண்டிய கால அளவில் இருந்து, சீரான வேகத்தில் அசைந்து இறுதியில் மலக் குடலைச் சென்று சேரும். வயிற்றில் வலி, வாயு போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

பயிற்சி மற்றும் சிகிச்சை பெற  மேலும் விவரங்களுக்கு…:

டாக்டர் ஏ.டபிள்யு.சலாவுதீன்,
டாக்டர் வஹாப் அக்குபஞ்சர் சிகிச்சை மையம்,
55, திருமலைப்பிள்ளை சாலை,
தி.நகர், சென்னை-17.
தொ.பே.: 9841512130, 9282112130.

(கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)
ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: