வில்லன் நடிகர் மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு தர வேண்டும் என கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் நடிகை பாக்கியாஞ்சலி மனு தாக்கல் செய்துள்ளார். ஆட்களை வைத்து தன்னை மிரட்டுவதாக, வில்லன் நடிகரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகை அஞ்சலி என்கிற பாக்கியாஞ்சலி. “உன்னை காதலித்தேன் எனும் படத்தில் கதா நாயகியாக தமிழில் அறிமுகமானார். சென்னையைச் சேர்ந்த வேலு என்பவரும் இப்படத்தில் நடித்தார். வேலுவுக்கு எதிராக சர மாரியாக குற்றச்சாட்டுகளை பாக்கியா ஞ்சலி சுமத்தியுள்ளார்.
இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: என்னுடன் நட்புடன் வேலு பழகினார். அவரது பெற்றோரும் எனது குடும்ப நண்பர்களாகினர். அதன் பின், வேலு உடனான நட்பு சரிவரவில்லை. அவர் மோசமாக நடந்து கொண் டார். ஓட்டல், பூங்கா, தியேட்டருக்கு வர வேண்டும் என கட்டாயப் படுத்துவார். தனக்கு ஒத்து ழைக்கவில்லை என்றால், நடிப்புப் தொழிலை நாச மாக்கி விடுவேன், என மிரட்டினார். வேலு பற்றி எனது தாயாரிடமும், அவரது பெற்றோரிடமும் தெரிவித்தேன். போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என வேலுவின் பெற்றோர் கேட்டுக் கொண்டனர். வேலுவுக்கு ஒத்து ழைக்குமாறு அவரது பெற்றோர் என்னிடம் கேட்டனர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னையும் அவர்கள் மிரட்டினர்.
சென்னையில் இருந்து கொச்சிக்கு ரயிலில் செல்லும் போது, அதே ரயிலில் வேலுவும் ஏறினார். அழகு சாதனங்கள் அடங்கிய எனது பையை அவர் எடுத்துச் சென்றதாக, சக பயணி ஒருவர் தெரிவித்தார். உடனடியாக அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்தேன். ரயிலில் இருந்து என்னை தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்யப் போவதாக, வேலு தன்னிடம் கூறியதாக அவரது தாயார் தெரிவித் தார். உடனே, ரயில் முழுவதும் அவரை நான்
தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து என்னை அவர் மிரட்டுகிறார். எனது பையை எடுப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது கத்தி, கட்டையை காட்டி மிரட்டினார். வெற்றுத் தாளில் கையெழுத்து பெற்றார். காதல் கடிதத்தையும் எழுதித் தரச்சொன்னார். இதை யெல் லாம் அவரது கேமராவில் பதிவு செய்தார். அவரது மிரட்டலுக்கு பயந்து, கையெழுத்து போட்டேன். கடிதமும் எழுதிக் கொடுத்தேன்.
கையெழுத்து வாங்கிய பேப்பரை வைத்து, எங்களுக்கு திருமணம் நடந்தது போலவும், 15 லட்ச ரூபாய் தர நான் ஒப்புக் கொண்ட தாகவும், அவரது அடுத்த படத்துக்கு நான் கதாநாயகி என ஆதாரம் காட்டுவதாக அவர் கூறினார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. வேலுவின் மிரட்டலால், புதிய படங்களில் நடிப்பதை ரத்து செய்தேன். அவரால்
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
வேலுவும் மனு தாக்கல்: வில்லன் நடிகர் வேலு தாக்கல் செய்த மனுவில், “படப்பிடிப்பு நடக்கும் போது என்னுடன் பாக்கியாஞ்சலி நெருக்கமாக பழகினார். இதை
பயன்படுத்திக் கொண்டு, என்னிடம் ஆயிரக் கணக்கில் கடன் பெற்றார். மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் வாங்கினார். அவருக்கு புதிய நண்பர்கள் கிடைத்தவுடன், என்னை தவிர்த்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது, ஏதாவது ஒரு காரணம் கூறுவார்.
தனது தாயாருடன் எனது வீட்டுக்கு பாக்கியாஞ்சலி வந்தார். வாங்கிய பணத்தை சில நாட்களில் தருவதாகக் கூறினார். நானும் ஒப்புக் கொண்டேன். பின், எனக்கு எதிராக புகார் கொடுத்திருப்பதாக அறிந்தேன். கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றேன். போலீசார் விசா ரணை நடத்தினர். என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என போலீசார் அறிந்தனர். அவரது ஆட்களை வைத்து என்னை பாக்கியா ஞ்சலி மிரட்டினார். அவரது தூண்டுதலால், என்னை கொல்வதாக ஒருவர் மிரட்டினார். நானும் போலீசில் புகார் கொடுத்தேன். எனது புகாரை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.
(கண்டெடுத்த செய்தி)