Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓட்டு போடும் வயதை 16 ஆக குறைக்க பரிசீலனை: ஓட்டு பதிவு எந்திரத்தில் அடையாள சீட்டு; தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மின்னணு எந்திர ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு யோச னைகளை தெரிவித்துள்ளன. வாக்காளர்கள் தாங்கள் போடும் ஓட்டு, தாங்கள் தேர்வு செய்த சின்னத்துக்குத்தான் விழுந்து ள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஏதாவது ஆதாரம் வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் யோசனை தெரிவித் துள்ளன.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும், வாக்குப்பதிவு செய்து முடிந்ததும், மின்னணு எந்திரத்தில் இருந்து, அவர் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போட்டார் என்பதை காட்டும் அடையாளச் சீட்டு வெளியில் வரும் வசதியை ஏற்படுத்த தலைமை தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது. அடையாளச் சீட்டை எத்தகைய முறைகளில் வாக்காளர் களுக்கு கொடுக்கலாம் என்று தொழில் நுட்ப நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இதற்காக உயர் நிலைக்குழு அமைக்கப் பட்டுள்ளது. அந்த குழு பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும்.   தேசிய வாக்காளர்கள் தினம் வருகிற 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அப்போது புதிய வாக்காளர் களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிக்கு வந்து வாக்களிக்க செய்வதை கட்டாயப்படுத்த இயலாது. வாக்குரிமை குறித்து வாக்காளர் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். வாக்குரிமை எவ்வளவு முக்கிய மானது என்பதை வாக்காளர்களுக்கு உணர செய்வோம். இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாக்களிக்க வந்து விடுவார்கள் என்று நம்புகிறோம்.
வாக்காளர்களில் சுமார் 35 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களை வாக்களிக்க வைப்பது முக்கியமானதாகும்.   பீகார் தேர்தலின் போது கறுப்பு பண நடமாட்டம் வெற்றிகரமாக கட்டுப் படுத்தப்பட்டது. அடுத்து வரும் தேர்தல்களிலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். தற்போதைய தலைமுறையினர் மிக இளம் வயதிலேயே எல்லா விஷயங் களையும் தெரிந்து கொள்ளும் வகை யில் உள்ளனர். எனவே வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேர்தல் அதிகாரி குரேஷி கூறினார்.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: