Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓட்டு போட்டதும் ரசீது கிடைக்க வழி: குரேஷி தகவல்

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித் துள்ளதை அடுத்து, ஓட்டளித் ததற்கு அடையாளமாக வாக்காளர்களுக்கு ரசீது வழங்கும் முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலி க்கப்பட்டு வருகிறது,” என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரி வித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கலந்து கொண்டார். தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப் பட்டது. இதன்பின் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி: இம்மாதம் 25ம் தேதி, “தேசிய வாக்காளர் தினம்’ ஆக கடைப் பிடிக்கப்படுகிது. இதையொட்டி, தேர்தல் கமிஷன் சார்பில் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில், நாடு முழுவதும் உள்ள இரண்டு கோடி புதிய வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்படவுள்ளது. இந்த புதிய வாக்காளர்கள் அனைவரு க்கும், வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப் பதாகவும், வாக்காளர்கள், தாங்கள் எந்த கட்சிக்கு ஓட்டளித் தோம் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியாத நிலை இருப்பதால், அதில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தேர்தல் கமிஷன் கவனம் செலுத்தி யுள்ளது. வாக்காளர்கள், ஓட்டளித் ததும், அதற்கான அடையாளமாக வும், அது தொடர்பான விவரங்களை உறுதி செய்து கொள்வதற் காகவும், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் இருந்தே ரசீது வழங்கும் நடைமுறையை (ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தவுடன், அதற்கான ரசீது வழங்கப் படுவது போல்) கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப் பட்டு வருகிறது. இதுகுறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. ஒவ்வொரு வாக்காளரும், கட்டாயமாக ஓட்டளித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். ஓட்டளிப்பது குறித்த அவசியத்தை வாக்காளர்கள் ஒருமுறை உணர்ந்து விட்டால், அதன்பின் தாங்களாகவே தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றுவர். வரும் காலங்களில் ஓட்டளிப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.

தேர்தலின் போது கறுப்பு பணம் பெருமளவில் பயன்படுத்தப் படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதை தடுப்பதற்கு, பீகார் சட்ட சபை தேர்தலில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. மற்ற மாநிலங்களிலும் இனிமேல், இதுபோன்ற நடைமுறைகள் பின் பற்றப்படும். தேர்தல் பிரசாரங்களின் போது, மீடியாக் களுக்கு பணம் கொடுத்து (பெய்டு நியூஸ்), தங்களுக்கு ஆதர வாக சில வேட்பாளர்கள் செய்தி வெளியிடக் கூறுவதாகவும் புகார் வந்துள்ளது. இதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப் படும். பீகார் தேர்தலின் போது, செய்தி வெளியிடுவதற்காக பணம் கொடுத்ததாக 86 வேட்பாளர் களுக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்களில் சிலர், தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வேறு ஏதாவது சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாமா என்பது குறித்தும் தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.  இவ்வாறு குரேஷி கூறினார்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: