Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக போக்குவரத்துகழங்கங்களின் நஷ்டம் ரூ.1000 கோடி: டீசல் பற்றாக்குறை குறித்து அமைச்சர் விளக்கம்

“தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கு கின்றன’ என, அமைச்சர் நேரு, சட்ட சபையில் அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டார். டீசல் பற்றாக் குறை காரணமாக பஸ்கள் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் விளக்க மளித்தார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, போக்கு வரத்துத் துறை தொடர்பாக அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொடர் கேள்விகளை எழுப்பினர். இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு பதில் அளித்தார்.

பீட்டர் அல்போன்ஸ்: போக்குவரத்துக் கழகங்கள் எண்ணெய் நிறுவன ங்களிடம் டீசல் வாங்கிய தற்காக பெரும் தொகையை நிலுவையில் வைத்து ள்ளதாக கூறப்படுகிறது. எவ்வளவு தொகை நிலுவை யில் உள்ளது? டீசல் பற்றாக் குறையால் பஸ்கள் இயக்கம் பாதிக்கப்படுவது உண்மையா?

அமைச்சர் நேரு: இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் டீசல் வாங்கும் போது, நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து பணம் கொடுப்பது இயல்பான ஒன்று தான். முந்தைய ஆட்சியோடு ஒப்பிடுகையில், முன் கூட்டியே கொடுத்து வருகிறோம். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி ரூபாய் செலுத்துகிறோம். இப்போதும், இரண்டு நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது. டீசல் பற்றாக்குறையால் பஸ்கள் இயக்கம் பாதிக்கப்பட வில்லை. கடந்த ஆட்சியில், ஒரு நாளில் அரசு பஸ்களில் ஒரு கோடியே 64 லட்சம் பேர் பயணித்தனர். தற்போது, இரண்டு கோடியே 11 லட்சம் பயணிகள் நாள்தோறும் பயணிக்கின்றனர்.

விஸ்வநாதன் – அ.தி.மு.க: எங்களது ஆட்சியில்  கழகங்கள் நஷ்டமடையவில்லை. இரு ஆண்டுகள் லாபத்தில் இயங்கின. தற்போது, அமைச்சர் கூறியபடி, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால், வருமானமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டம் அதிகரித் திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது எவ்வளவு ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை அமைச்சர் தெரிவிப்பாரா?

நேரு: உங்களது ஆட்சியில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரவில்லை; போனஸ் தரவில்லை. அதனால், உங்களுக்கு செலவு மிச்சமானது. 18 முறை டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க, தமிழக அரசு 1,254 கோடி ரூபாய் மானியம் அளித்தது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தொழிலாளர் களுக்கு 195 கோடி ரூபாய் சம்பள உயர்வு வழங்கினோம். இப்போது நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், 520 கோடி ரூபாய் சம்பள உயர்வு வழங்கியுள்ளோம். ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கி வருகிறோம். போக்குவரத்துக் கழகங்களில் முன்பு 700 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், தற்போது 1,000 கோடி ரூபாயாக உள்ளது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னச்சாமி அடிக் கடி எழுந்து பேசுகிறார். அதனால் தான், போக்குவரத்து தொழிற் சங்க தேர்தலில், அவருக்கு ஆப்பு வைத்து விட்டனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மூட்டைப்பூச்சி ஒழிக்க நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் – அ.தி.மு.க: அரசு பஸ்களில் பயணிப்போர் மூட்டைப்பூச்சி கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமைச்சர் நேரு: இது குறித்து புகார் வந்ததும், முறையாக மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், “ஸ்பேர் பஸ்’களை எடுத்து சிலர் பயணிக்கின்றனர். 20 நாட்கள் வரை பயன்படுத்தப்படாமல் இருப்பதால், இது போன்று நடந்திருக்கலாம். இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பஸ்கள் எத்தனை?தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் 16 ஆயிரம் பஸ்கள் இயங்கின. தற்போது 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், 15 ஆயிரம் பஸ்கள் புதியவை. அரசு பஸ்களில் தினமும் இரண்டு கோடியே 11 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.

நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: