Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்னிய செலாவணி சட்டத்தை லலித்மோடி மீறினார்: பாராளுமன்ற நிலை குழுவிடம் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு

2-வது ஐ.பி.எல். போட்டி 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இந்தப் போட்டியை நடத்தியது தொடர்பாக அன்னிய செலாவணி விதி முறைகளை மீறியதாக குற்றச் சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளு மன்ற நிதித்துறை நிலைக் குழு விசார ணை நடத்தி வருகிறது. இந்த குழு முன்பு கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங்க மனோகர், ஐ.பி.எல். இடைக் கால தலைவர் அமின் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
2 1/2 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அன்னிய செலாவணி மேலாண்மை மோசடி சட்டத்தை லலித் மோடி மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். லலித்மோடி தவறு செய்ததாகவும், அவர்மீது நல்ல நம்பிக்கை வைத்து இந்தப்போட்டி அனுமதி அளித்த தாகவும் அவர்கள் கூறினார்கள்.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடியது வீரர்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்தது. தென் ஆப்பிரிக் காவில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது. அதை யார்-யார் செலுத்தி னார்கள் என்பது குறித்தும் நிலைக்குழு கேள்வி எழுப்பியது.
(நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: