Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒட்டக பால், சிறுநீர்: புற்று நோயை குணப்படுத்த . . .

அரபு நாட்டு பயோ-டெக்னாலஜி நிறுவனம் புற்றுநோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல் வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடு பட்டனர்.
அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது.
எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான எலிகளை போல துள்ளி குதித்து ஓடுகிறது.
ஒட்டகம் பால்- சிறுநீரில் இருந்து தயாரான இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக உருவாக்குகிறது. இது பாதிக்கப் பட்ட புற்று நோய் செல்களை அளித்துவிட்டு புதிய செல்களை உருவாக்கு கிறது.
இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படு வது இல்லை. எனவே மனிதர் களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்திவிடலாம் என விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக இப்போது மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.
இதிலும் வெற்றி ஏற்பட்டால் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும்.  உலகில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகிறார்கள். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய் அடுத்து புற்று நோயால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: