Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஞ்சிதா புதிய புகார்: லெனின் கருப்பன் பேட்டி

சாமியார் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா நெருக்மாக இருந்த வீடியோ காட்சி, தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா கற்பழித்து விட்டதாக அவரது சீடர் லெனின் கருப்பன் போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் ரஞ்சிதா, தன்னை கற்பழிக்க முயன்றதாக லெனின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒரு வாரப்பத்திரிகை அளித்த பேட்டியில், ரஞ்சிதா, லெனின் மீது தொடரப்பட்ட வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் என் பெயரை ஏன் இழுக்கிறார். இனி உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளார். நித்யானந்தாவின் சிஷ்யை ஆர்த்தியுடன் சேர்ந்துதான் லெனின் பிரச்சினை செய்து வருகிறார் என்ற புதிய குற்றச் சாட்டையும் கூறியுள்ளார்.
இதற்கு லெனின் கருப்பன் மறுப்பு தெரிவித்து கூறியதாவது:-
நித்யானந்தா மீது சட்டப்படி வழக்கு தொடர்ந்துள்ளேன். இன்னும் ஒரு சில மாதங்களில் உண்மை தெரிய வரும். யார் பொய் சொல்கிறார்கள், உண்மை சொல்கிறார்கள் என்பது மக்களுக்கு அப்போது தெரியும்.
ரஞ்சிதா 10 மாதமாக எங்கே போனார்? இப்போது திடீரென வந்து புகார் கொடுக்கிறார். நித்யானந்தா பேச்சை கேட்டு கொண்டு அவர் செயல் படுகிறார். தன் மீதுள்ள வழக்கை திசை திருப்புவதற்காக நித்யானந்தா, ரஞ்சிதாவை தூண்டி விடுகிறார். ரஞ்சிதா அவர் பேச்சை கேட்டு பொய் பேசுகிறார். உள்நோக்கத்துடன் என்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதை சட்டப்படி சந்திப்பேன்.
தொடர்ந்து பொய்யான வதந்திகளை ரஞ்சிதா பரப்புவதால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். ஆர்த்தி என்னுடன் பணி யாற்றியவர். தன்னைப் போலவே பிறரையும் அதே கண்ணோட் டத்தில் ரஞ்சிதா பார்க்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: