Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜய் டி.வி. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழர் திருநாளாம் ‌பொங்கல் திருநாளை கொண்டாடும் நேயர்களுக்காக விஜய் டி.வி., பல சிறப்பு நிகழ்ச்சிகளை அறிவித் துள்ளது.

அதன்படி பொங்கல் பண்டிகை தினமான 15ம்தேதி

காலை 6.30 மணிக்கு வில்லுப்பாட்டு (சிறப்பு நிகழ்ச்சி),

7 மணிக்கு பட்டிமன்றம்,

8.30 மணிக்கு தூங்காநகரம் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்,

9 மணிக்கு காபி வித் அனு சிறப்பு நிகழ்ச்சி,

10 மணிக்கு வில்லா டு வில்லேஜ் என தொடர்கிறது.  காலை

11 மணிக்கு கார்த்தியுடன் ஒரு சிறுத்தைப் பொங்கல் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் கார்த்தியுடன், தமன்னா மற்றும் சந்தானம் கலந்து கொள்கிறார்கள்.

பிற்பகல்

1 மணிக்கு ஒளிபரப்பாகும் நீயா நானா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் இன்றைய சினிமாவில் அழகுக்கு என்ன இலக்கணம் மற்றும் ஏன் கனவுக் கன்னிகள் இல்லை என்ற தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது. நடிகர்கள் ரேகா, குயிலி மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

மாலை 3 மணிக்கு சிக்கு புக்கு படம்,

6 மணிக்கு இளைஞர்களின் இளைஞன் சிறப்பு நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

இரவு 7 மணிக்கு டைரக்ரட்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், கேமராமேன் கதிர், டான்ஸ் மாஸ்டர் தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கும் அது இது எது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இரவு 8 மணிக்கு ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியும்,

இரவு 9 மணிக்கு ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியும் ஒளிபரப் பாகிறது.

இரவு 10 மணிக்கு தேவயானி, ராஜகுமாரன் பங்கேற்கும் காதல் மீட்டர் சிறப்பு நிகழ்ச்சியுடன் அன்றைய சிறப்பு நிகழ்ச்சி முடிகிறது.

மறுநாள் 16ம்தேதி காலை 9 மணிக்கு நடிகர் ஆர்யாவுடன் ஒரு உரையாடல் நிகழ்ச்சியுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

11 மணிக்கு கல்யாண வைபோகம்,

பிற்பகல் 1 மணிக்கு விஜய் முகம், 3 மணிக்கு அய்யனார் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.

ஜனவரி 17ம்தேதி காலை 7 மணிக்கு சென்னையில் திருவையாறு  (சிறப்பு நிகழ்ச்சி),

11 மணிக்கு மம்முட்டி, மீரா ஜாஸ்மின் நடித்த ஒரே கடல் படத்துடன் தொடர்கிறது.

பிற்பகல் 2 மணிக்கு ஈரம் படம் திரையிடப்படுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: