தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தீவிரமாகி வருகின்றன. கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சிகளிடையே
பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக் கையில் காங்கிரஸ் கட்சியை கடுமை யாக விமர்சித்துள்ளார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி உறுதி யாகி விட்டது என்றும், இதனால் தான் “ஸ்பெக்ட்ரம்” பிரச்சினையில் ஊழல் நடை பெறவில்லை என்று கபில் சிபல் கூறுவதா கவும் தெரிவித்துள்ளார்.
எனவே, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் இசக்கி முத்து ஆகியோர் நேற்று, ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று சந்தித்தனர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பிரகாஷ்கரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஏ.பி. பரதன் ஆகி யோருக்கு டெலிபோன் மூலம் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 20-ந்தேதிக்குப் பிறகு கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநில குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தொகுதி பங்கீடு குறித்து ஜெயலலிதாவிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு ள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், பொங்கலுக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார். கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்த சில தினங்களில் அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும். அதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் பிரசார பணிகள் தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி