Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோயின்றி வாழ, காய்கறிகள்

பனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக் கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜல தோஷம் ஆகியவை ஏற் படாமல் கீழ்கண்ட காய் கறிகள் நம்மை பாதுகாக்கும்.
வெண்டைக்காய் :
குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி’, `பி’ மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக் காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.
அவரைக்காய் :
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலு வாக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.
புடலங்காய் :
நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரண மாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது.
சுரைக்காய் :

இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமை யாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்ற வற்றிலும் உதவுகிறது.

(கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: