Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிப்ரவரி 19-ந்தேதி முதல் உலககோப்பை கிரிக்கெட் போட்டி . . . .

உலககோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.   உலககோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் இருந்து 15 பேர் கொண்ட அணி தேர்வு வருகிற 17-ந்தேதி (திங்கட் கிழமை) நடக்கிறது.
தேர்வு குழு வருகிற 17-ந்தேதி சென்னையில் இந்திய அணியை தேர்வு செய்கிறது என்று கிரிக்கெட் வாரியம் இன்று தெரிவித் ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலககோப்பை போட்டி என்பதால் 15 பேர் கொண்ட சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழுவினருக்கு உள்ளது.
டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், தெண்டுல்கர், யுவராஜ் சிங், ரெய்னா, யூசுப்பதான், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், பிரவீண்குமார் ஆகியோர் இடம் பெறுவது உறுதி யாகிறது. வீராட் கோக்லி, ரோகித் சர்மா இடையே 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற போட்டி இருக்கலாம். இதில் கோக்லிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை கூடுதலாக பேட்ஸ்மேன்களை சேர்க்க நினைத்தால் இருவருமே இடம் பெறலாம்.
தமிழக வீரர் முரளி விஜய்க்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது. வேகப்பந்து வீரர்களில் நெக்ரா, முனாப்பட்டேல், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த் ஆகிய 4 பேர்களில் 2 பேர் இடம் பெறுகிறார்கள். இதில் நெக்ரா, முனாப்பட்டேலுக்கு வாய்ப்பு உள்ளது.
சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், ஒஜா, பியூஸ் சாவ்லா, அமித் மிஸ்ரா உள்ளனர். இதில் அஸ்வின், ஒஜாவுக்கு வாய்ப்பு கிடைக்க லாம். 2-வது விக்கெட் கீப்பர் தேர்வு பெறுவாரா என்பது உறுதி யாக தெரியவில்லை.  உலககோப்பை போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.
“ஏ” பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசி லாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகியவை இடம் பெற்று ள்ளது.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: