கரிநாளை முன்னிட்டு, சந்தையில் கொழு கொழு ஆடுகளை, 8,000 ரூபாய்க்கு, வியா பாரிகள் விற்பனை செய்தனர். சேலம் மாவட்டம், கொளத்தூரில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமை சந்தை கூடும். சேலம் மாவட்ட சுற்றுப் பகுதிகளில் இருந்து விவ சாயிகள், ஆடு களை கொண்டு வந்து விற்பனை செய்வர்.சந்தையில் வழக்கமாக, கொழு கொழு ஆடுகள், 3,500 முதல் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து கரிநாளில் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும். வழக்கத்தை விட நேற்று சந்தைக்கு ஆடுகளும், மாடுகளும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர்.மேச்சேரி பகுதியில் இருந்து வியாபாரிகள், கொழு கொழு வென வளர்ந்த வெள்ளாடு மற்றும் பல்லையாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அந்த ஆடுகளை வியாபாரிகள், 7,500 முதல் 8,000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி சென்றனர். நேற்று சந்தையில் மாடுகள் விற்கும் விலைக்கு, கொழு கொழு ஆடுகள் விற்பனையானது. பொங்கலை முன்னிட்டு ஆடுகள், 8,000 ரூபாய் வரை விற்பனையானதால், அதற்கேற்ப இறைச்சி விலையும் அதிகரிக்கும். இதனால் அசைவ பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )