Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்: கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா?

அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து பதுக்கி யுள்ள இந்தியர்களின் பெயர் களையும், அது தொடர்பான தகவல் களையும் வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன், அது வெளியாகுமா என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

சுவிட்சர்லாந்து உட்பட சில அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர், தாங்கள் முறைகேடான வகையில் சேர்த்த பணத்தை டிபாசிட் செய்துள் ளதாகவும், அந்த கறுப்புப் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் கடந்த லோக்சபா தேர்தலின் போது செய்திகள் வெளியாகின. “தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பாரதிய ஜனதா கட்சியும் அறிவித்தது. இதையடுத்து, வெளி நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள அந்தக் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வக்கீலுமான ராம்ஜெத் மலானி உட்பட பலர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கையெழுத்தில்லாததால், கடந்த நவ.30ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்து அறிக்கையை சம்பந்தப்பட்ட துறையினருக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் சுதர்சன ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜார் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிர மணியம், “ஜெர்மன் நாட்டு வங்கிகளில் பணம் டிபாசிட் செய் துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு தெரி வித்துள்ளது,” என்றார். ராம்ஜெத் மலானி சார்பாக ஆஜரான சீனியர் வக்கீல் அனில் திவான், “”அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் விவகாரத்தில் மத்திய அரசு அதிக அக்கறை காட்ட வில்லை,” என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்; அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன்? அந்தத் தகவல்களை வெளியிடுவதில், அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது என கிடுக்கிப்பிடியாக @கள்வி எழுப்பி உள்ளனர்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து பதுக்கியுள்ள இந்தியர்களின் பெயர்களையும், அதுதொடர்பான தகவல்களையும் வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன், அது வெளியாகுமா என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சுவிட்சர்லாந்து உட்பட சில அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர், தாங்கள் முறைகேடான வகையில் சேர்த்த பணத்தை டிபாசிட் செய்துள்ளதாகவும், அந்த கறுப்புப் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் கடந்த லோக்சபா தேர்தலின் போது செய்திகள் வெளியாகின. “தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பாரதிய ஜனதா கட்சியும் அறிவித்தது. இதையடுத்து, வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள அந்தக் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வக்கீலுமான ராம்ஜெத் மலானி உட்பட பலர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கையெழுத்தில்லாததால், கடந்த நவ.30ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்து அறிக்கையை சம்பந்தப்பட்ட துறையினருக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் சுதர்சன ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜார் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், “”ஜெர்மன் நாட்டு வங்கிகளில் பணம் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது,” என்றார். ராம்ஜெத் மலானி சார்பாக ஆஜரான சீனியர் வக்கீல் அனில் திவான், “”அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் விவகாரத்தில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டவில்லை,” என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்; அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன்? அந்தத் தகவல்களை வெளியிடுவதில், அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது என கிடுக்கிப்பிடியாக @கள்வி எழுப்பி உள்ளனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: