மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு —
வணக்கம். என்ன பார்க்கிறீர்கள்? அம்மா, சகோதரி என சொல் லாமல், மேடம் என சொல்கிறேனே என்று பார்க் கிறீர்களா? பெத்த வளை, உடன் பிறந்த வளை தவிர, வேறெந்த பெண்ணையும், “அம்மா’ என்றும், “சகோதரி’ என்றும் அழைக்க விரும்ப வில்லை நான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே யான ஒரே வேலை காதலிப்பது தான் என, திண்ணமாக நம்பு கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்க ளிடம் விவரிக்க விரும்புகிறேன். படித்து விட்டு, அட்வைஸ் மழை பொழிந்து விடாதீர்கள். அறிவுரை எனக்கு மகா அலர்ஜி. வேண்டுமானால், அபிப்ராயம் சொல்லுங்கள். என் தற் போதைய வயது 58. மத்திய அரசு பணியிலிருந்து ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். எனக்கு, இரு பெண் மேலதிரி காரிகள். முதலாமவள் ஐந்தடி, பத்து அங்குலம் உயரம் இருப்பாள்; பிங்க் நிறம். இரண்டாமவள் ஐந்தடி, எட்டு அங்குலம் உயரம்; கறுப்பு நிறம். அவர்களுக்கு இடையே நான் நிற்கும்போது, இரு ரேஸ் குதிரைகளுக்கு இடையே நிற்கும் ஜாக்கி மாதிரி தெரிவேன். இருவருக்கும் என்னைவிட இரண்டு வயது குறைவு. இரண்டு பெண்களுமே, இரண்டு விதத்தில் அழகு. அவர்கள் பேசும் இங்கிலீஷை நாள் பூராவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தினமும், நார்த் இண்டியன் டிரஸ் அணிந்து வந்து அசத்துவர். இருவரும் உயிர் தோழிகள். முதலாமவள், என் 42வது வயதில், முதலில் எனக்கு பிரண்டு ஆனாள். சம்பிரதாயமான நட்பு, உடல் ரீதியான ஈர்ப்பாய் மாறியது. அவளும் திருமணமானவள்; நானும் திருமணமானவன். இருவருக்கும் திருமணபந்தம் மீறிய உறவு தோன்றியது.
அலுவலகத்தில் மட்டுமல்ல, அந்தரங்கத்திலும் எனக்கு மேலதிகாரி ஆனாள் அவள். அவளது ஏவல்களை, ஒரு பணியாளனாகச் செய்து கொடுத்தேன். அவளது கணவன், ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனான்; விதவையானவள். இரண்டாமவளையும் எங்களுடன் இருக்க அழைத்து வந்தாள். வந்த சில நாட்களில் இரண்டாமவளின் கணவனும், ஒரு விபத்தில் இறந்து போனான். மொத்தத்தில், ஒரு ஓரின சேர்க்கை ஜோடிக்கு, “செக்ஸ் வொர்க்கர்’ ஆனேன்.
ஒவ்வொரு சனிக்கிழமையும், அவர்களது பிளாட்டுக்கு போய் விடுவேன். இருவருக்கும் ஆயில் மசாஜ் செய்துவிடுவேன். அத்துடன் நில்லாது, அசைவம் சமைத்து போடுவேன். தெனாலி ராமன், பீர்பால் போல் கோமாளித்தனங்கள் செய்து, அவர்களை சிரிக்க வைப்பேன். திங்கட்கிழமை விடியற்காலை, என் வீட்டுக்கு வந்து விடுவேன். எங்களது விடுமுறை கும்மாளம், மனைவிக்கு தெரியாதபடி பார்த்துக் கொண்டேன். சனிக்கிழமை இரவிலிருந்து, திங்கட்கிழமை அதிகாலை வரை, ஹிப்பிக்கள் போல்தான் அறைக் குள் அலைவோம். கூட்டி கழித்து பார்த்தால், “ஹெட்ரோ செக்சுவல் ரிலேஷன்ஷிப்’ மெயின்டைன் செய்தோம்.என் 56வது வயதில், அதாவது இரண்டு வருடங்களுக்கு முன், என்னை யார் முழுநேர வேலையாளாக வைத்துக் கொள்வது என்பதில், இரண்டு பெண்களுக்கும் யுத்தம் மூண்டது. நான் யார் பக்கமும் நில்லாது, நடுநிலை காத்தேன். சண்டைக்கு பின், இருவரும் பிரிந்தனர். முதலாமவள் ஆன்மிகத்தில் மூழ்கிப் போனாள்; இரண்டாமவள், மலர் மருத்துவம் பிராக்டிஸ் செய்து, மருத்துவம் பண்ணுகிறாள். நானோ, பயண கட்டுரையாளராக மாறி, பல ஆசிய நாடுகளுக்கு போய் வந்த வண்ணம் இருக்கிறேன். இப்போது நாங்கள் நண்பர்கள்; ஆனால், எங்களுக்குள் செக்ஸ் இல்லை, மசாஜ் இல்லை. பார்த்தால் சிரித்துக் கொள்வோம். பழைய விஷயங்களை மறந்தும் அசைப் போடுவதில்லை. எங்களது திருமணப்பந்தம் மீறிய உறவால், எங்களின் மூன்று குடும்பங்களுக்கும், சிறு பாதிப்பும் இல்லை. பதிலாக எங்களது குடும்ப கடமைகளை மிக நிறைவாக செய்து முடித்திருக்கிறோம். எங்கள் மூவரின் ரகசியத்தை, இப்போதுதான் நாலாவதாக உங்களிடம் வெளிப்படுத்தி உள்ளேன். இப்போது, சொல்லுங்கள்… சமுதாயத்தை சிறிதும் பாதிக்காத எங்களது காம தகனங்கள் தப்பா? ஓய்வு பெற்ற பின் எங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? முன்பு மிளகாய் பஜ்ஜி கிடைத்தது; சாப்பிட்டேன். இப்போது மிளகாய் பஜ்ஜி கிடைக்கவில்லை; சாப்பிட வில்லை. அதுபோல்தான், நாங்கள் முன்பு ஆட்டம் போட்டதும், இப்போது ஆட்டம் போடாததும். பிறர் நலன் கெடுக்காத தனி மனித விருப்பு, வெறுப்புகளில், உங்களைப் போன்ற மாரல் போலிகள் மூக்கை நீட்டக் கூடாது என்பதே, நான் உங்களுக்கு கொடுக்கும் ஹம்பிள் அட்வைஸ். புரிகிறதா மேடம்? – இப்படிக்கு, உண்மையுள்ள ஓர் ஆண்மகன்.
அன்புள்ள சகோதரருக்கு—
வணக்கம். என்ன பார்க்கிறீர்கள்? பெற்றோரையும், உடன்பிறந்த சகோதரர்களையும் மட்டும், நான் உறவு வார்த்தை வைத்து விளிப்பதில்லை. மற்றவர்களையும், அவரவர் வயது வைத்து, சில பல சமூக கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி, ஆண் – பெண் உறவில், சில, லட்சுமண பாதுகாப்பு கோடுகளை போட விரும்பி, அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் என விளிப்பதுண்டு. ஆணுக்கும், பெண்ணுக்கு இடையே காதலித்தல் தவிர, ஆயிரம் கொடுக்கல், வாங்கல்களை கட்டாயமாக்கியுள்ளான் இறைவன். “அம்மா’ என்ற ஒற்றை வார்த்தை, ஒரு பில்லியன் உலகமொழி வார்த்தைகளின் மகாராணி. “அம்மா’ என்ற வார்த்தை, மனித பாவங்களை கழுவி, களையும் ரசவாத வார்த்தை. உங்களுக்கு எங்கே புரியப் போகிறது, உறவு வார்த்தைகளின் மகத்துவம்? சரி… உங்கள் கடித உள்ளடக் கத்துக்கு வருவோம். நீங்களும், இரு பெண்களும் முறையற்ற உறவில் மூழ்கி களித்ததை, ஜனாதிபதி விருது பெற்றது போல் எழுதி, பெருமை பீற்றியிருக்கிறீர்கள். ஒளிவில், மறைவில் நடந்த எங்களது செயல்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என, உங்களுக்கு நீங்களே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறீர். உலகின் 700 கோடி மக்களும், பில்லியன் ஜீவராசிகளும், ஒரு கண்ணுக்கு தெரியாத இழையால் இணைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் வெயிலடிச்சான் பட்டி இருட்டில் அமர்ந்து கண் சிமிட்டினால், அலாஸ்கா பெண்ணுக்கு அது ஒரு காதல் சமிக்ஞையாகும். ஒரு சமுதாயத்தில் ஒரு தனிமனிதன், மனுஷியின் நல்ல, கெட்ட செய்கை அந்த முழு சமுதாயத்தையும் பாதுகாக்கிறது; பாதிக்கிறது. நீங்கள் 14 வருடம் போட்ட ஆட்டம், யாருக்கும் தெரியுமோ இல்லையோ கடவுளுக்குத் தெரியும். உங்கள் மூவரின் வக்கிரம், உங்கள் குடும்ப அங்கத்தினர் களை பண ரீதியாக வேண்டுமானால் பாதிக்காமல் இருக்கலாம்; கலாசார ரீதியாய் கட்டாயம் பாதித்திருக்கும். சிகரத்தின் மீதிருந்து வீசப்படும் ரோஜா இதழ் கூட, அதன் அளவில் ஒரு பாதிப்பை விழுந்த இடத்தில் ஏற்படுத்தவே செய்யும். முடிந்தால், “கெயஸ் தியரி’யை நெட்டில் தேடி படிக்கவும். “அலிபி இல்லாமல், கொலை செய்து விட்டோம்; பாராட்டுங்கள்…’ என்கிறீர்கள். தனி மனித ஒழுக்கம், பிறரின் கண்களின் முன் அரங்கேற்றும் நிஜ நாடகம் அல்ல. ஒரு மனிதன், தன் ஜீனை அடுத்த தலைமுறைக்கு மகன் அல்லது மகள் மூலம் எடுத்துக் செல்கிறான். ஆனால், நியூட்டன், ஐன்ஸ்டீன், காந்திஜி, மார்ட்டின் லூதர்கிங் போன்றோர் தங்களின் கண்டு பிடிப்புகளை, கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறை கோடி, கோடி பேருக்கு எடுத்துச் செல்கின்றனர். ஹிட்லரின் இனவெறி, ராஜ பக்ஷேவுக்கு தாவி வரவில்லையா? நல்லவை மட்டுமல்ல, கெட்டவையும் கூட அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்கின்றன.
நீங்கள் மூவரும் வாழ்ந்தது ஒரு சுயநலமான மிருக வாழ்க்கை. மேலதிகாரியை குஷிப்படுத்த சில, பல சலுகைகள் பெற, இரு பெண்களுக்கு காம ஊழியம் செய்திருக்கிறீர். முதலாமவர் தன் தவறை நினைத்து, நினைத்து வருந்தியதால்தான், தற்சமயம், ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கிறார். இரண்டாமவரும் தன் தவறை உணர்ந்தே, மலர் மருத்துவம் பார்க்கிறார். நீங்கள் மட்டும் தவறை நினைத்து வருந்தவில்லை எனக் கூற முடியாது. குற்ற உணர்ச்சி யை, தான் செய்தது தவறே இல்லை என்ற மமதை ஏறி மிதித்திருக்கிறது. மமதை விலக குற்ற உணர்ச்சி பீறிடும். எப்போது? நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு! காமக் களியாட்டங்களை மிளகாய் பஜ்ஜி சாப்பிடுவதுடன் ஒப்பிடுவது அபத்தம் சகோதரரே… நீங்கள் செய்த அட்டூழியத்தை, அன்புடன் அந்தரங்கத்துக்கு எழுதி அனுப்பாமல் இருந்திருந்தால், என் அட்வைஸ் மழையில் நீங்கள் நனையாமல் இருந்திருப்பீர். அனுப்பி விட்டீர்களே… என்ன செய்வது? ஆகவே, அட்வைஸ் சாரலுடன் நிறுத்தியுள்ளேன். உங்கள் கடிதம் இளைய சமுதாயத்துக்கு தவறான சமிக்ஞையை தந்துவிடக் கூடாது அல்லவா? இறைவனின் முதுகில் பட்ட பிரம்படி உலக மக்கள் அனைவரின் முதுகில் உணரப்பட்டது போல், உங்களின் ஒழுக்க கேட்டின் அதிர்வை, நடப்புகால சமூக சீரழிவுகளில் அப்பட்டமாக உணர்கிறேன். உங்கள் பாவங்களின் சம்பளம், ஓய்வுக்குப்பின் முழுமையாக கிட்டும்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத். (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)