தமிழ் சினிமாவில் கவுண்ட மனி, பாக்யராஜ், சுதாகர், பாண்டியன், கார்த்திக், ரேவதி, ராதா, ரேகா உள்ளிட்ட ஏராள மான திரை நட்சத்திர ங்கள் அறிமுகப் படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதி ராஜா. இவர் அறிமுகப்படுத்திய அனைவரும் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள். அதேபோல் இவர் அறிமுகப்படுத்திய நடிகை தான் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் படத்தில் வாத்து மேய்கும் பெண்ணாக வந்த ரஞ்சிதா கர்ணா, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு படங் களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தாவுடன் இருந்த சல்லாப காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனை யடுத்து சில காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலை யில் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தி த்த ரஞ்சிதா அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது தான் இல்லை என்றும், இதற்கு பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
தற்போது நடிப்பில் ரஞ்சிதா மீண்டும் கவனம் செலுத்தி, மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனிடையே பாரதிராஜா தமது நீண்டநாள் கனவுபடமான அப்பன் ஆத்தா படத்திற்கான வேலையை துவங்கிவிட்டார். இதற்காக சூட்டிங் லோக் கேசனை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் முக்கியான ரோல் ஒன்றில் ரஞ்சிதா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ரஞ்சிதாவிடம் பாரதி ராஜா அணுகியதாகவும் தெரிகிறது. படத்தின் அந்த கேரக்ட ருக்கு ரஞ்சிதா தான் பொறுத்தமானவர் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா.
ஏற்கனவே நாடோடித் தென்றல் படத்தின் மூலம் தமிழில் ரஞ்சிதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, மீண்டும் தனது அப்பன் ஆத்தா படத்தின்மூலம் ரீ-எண்டிரி கொடுக்கிறார்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )