நடப்பு நதியாண்டில் 6,000 கோடி ரூபாய் பிரீமியம் தொகையை இலக்காக கொண்டு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுகிறது,” என, அந்நிறு வனத்தின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில், எங்கள் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மோட்டார் மற்றும் ஹெல்த் துறைகளில் புதிய திட்டங்கள் பல அறிமுகப் படுத்தியுள்ளோம். இரு ஹெல்த் பாலிசிகள் ‘ஐ.ஆர். டி.ஏ.,’ ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் 1,432 அலுவலகங்கள் செயல்படுகின்றன. கிராமப்புற பெண்கள் வாழ்வை மேம்படுத்த ‘வாழ்ந்து காட்டுவோம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். நாட்டில் 50 கிராமங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்ட மிட்டுள்ளோம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலுள்ள பைர மங்களம் கிராமத்தை இத்திட்டத்தின் கீழ் தத்தெடுத்துள்ளோம். கார்ப்பரேஷன் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ள்ளோம். நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் நிறுவனத்தின் ஏஜென்சி எண்ணிக்கையை தற்போதுள்ள 23 ஆயிரத்திலிருந்து, 37 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். நடப்பு நதியாண்டில் 6,000 கோடி ரூபாய் பிரீமியம் தொகையை இலக்காக கொண்டு செயல் படுகிறோம், என கூறப்பட்டுள்ளது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )