Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவர் மிரட்டலில் இருந்து காக்க உயர் அதிகாரி மனைவி கோரிக்கை

பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் இந்திய உயரதிகாரி ஒருவரின் மனைவி, கணவரின் அச்சுறுத் தலுக்குப் பயந்து தன் ஐந்து வயது மகனுடன் தலை மறை வாகி விட்டார். தொடர்ந்து பிரிட்டனில் தங்கி யிருப்பதற்கு அனுமதியளிக்கும் படியும், தனக்கு பாதுகாப்பு கோரி யும் அந்நாட்டு அரசுக்கு அவர் கடிதம் அனுப்பி யுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் வர்மா. இவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் பொருளாதாரத் துறை உயரதி காரியாக பணியாற்றி வருகிறார். இந்திய ஹை கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோரை அடுத்து மூன்றாவது இடத்தில் அனில் வர்மா உள்ளார். இவரது மனைவி பரோமித வர்மா. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

கடந்தாண்டு டிசம்பர் 11ம் தேதி, வடமேற்கு லண்டனில், “கோல்டர்ஸ் கிரீன்’ பகுதியில் உள்ள வர்மாவின் வீட்டு வாசலில் வைக்கப்  பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தைப் பிடுங்கி எறிய முயன்றார். அம்மரம், பரோமிதாவின் உறவினர்களால் கொடுக்கப்பட்டது என்பது தான் அவரது கோபத்துக்கு காரணம். அதைத் தடுக்க முயன்ற பரோமிதாவின் முகத்தில் வர்மா ஓங்கிக் குத்து விட்டார். அதனால் மூக்குடைந்து ரத்தம் வழிய, பரோமிதா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். அண்டை வீட்டார்கள், அவரை அழைத்து சிகிச்சை அளித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

வர்மாவின் பதவியின் காரணமாக அவரிடம் போலீசார் அதிகளவில் விசாரணை நடத்த முடியவில்லை. இதையடுத்து, வர்மா, தனது பதவியை காரணம் காட்டி, போலீசால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், பரோமிதாவையும், அவரது குடும்பத்தையும் ஒழித்துக் கட்டி விடுவதாகவும், அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் மிரட்டினார். இதனால் பயந்து போன பரோ மிதா, தனது ஐந்து வயது குழந்தையுடன் தலைமறைவானார்.

பிரிட்டன் அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தன் விருப்பத்துக்கு மாறாக கணவர் இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிப்பதால், தான் பிரிட்டனில் இருக்கும்படி மனிதாபி மான அடிப்படையில் நடவடிக் கைகள் எடுக்க வேண்டும், பாது காப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளி யிட்ட அறிக்கையில், இவ்விவகாரத்தை அமைச்சகமும், இந்திய ஹை கமிஷனும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: