Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மங்காத்தாவில் அஞ்சலி

நடிகர் அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இப்படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கு கிறார். படத்தில் அஜீத் திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக் கிறார். இவர்கள் தவிர அர்ஜீன், லஷ்மி ராய், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந் நிலையில் இவர் களது கூட்டணியில் நடிகை அஞ்சலி யும் சேர்ந்துள்ளார்.

அங்காடித் தெரு படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி எங்கோ சென்று விட்டார். ஆனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் எதுவும் சரியா அமையவில்லை. இதனால் இனிமேல் புது முகங்களுடன் நடிக்கப் போவதில்லை என்றும், பெரிய ஹீரோக் களுடன் மட்டுமே நடிக்கப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் மங்காத்தாவில் நடிகர் அஜீத்துடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுபற்றி அஞ்சலி கூறுகையில், “மங்காத்தா படத்தில் எனக்கு சிறிய ரோல் தான் என்றாலும் பெரிய ஹீரோவுடன் சேர்ந்து நடிப்பதால் விட்டுவிட முடியுமா, அதனால் இந்தபடத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன்” என்கிறார்.

மங்காத்தாவில் அஞ்சலி நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று பார்த்தால், இப்படத்தை தயாரிப்பது க்ளவுடு நைன் மூவிஸ், அதேபோல் துங்காநகரம் படத்தை தயாரிப்பதும் இந்த நிறுவனம் தான். தூங்காநகரம் படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார், ஆகையால் தான் மங்காத்தாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: