Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேற்கு வங்கத்தில் மார்க்., கம்யூ., ஆபீஸ் தகர்ப்பு; கண்ணிவெடி வைத்தவர்கள் மாவோ.,க்களா ?

மேற்குவங்கத்தில் மார்க்., கம்யூ., அலுவலகம் தீ வைத்தும், சுய நல உதவிக்குழு கட்டடம் கண்ணி வெடி வைத்தும் தகர்க்கப் பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. இந்த சதிச் செயலில் ஈடுபட்டது மாவோ யிஸ்ட் நக்சல்களாக இருக்கலாம் என சந்தே கிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசில் கூட்டணியில் அங்கம் பெற்றுளர்ள மம்தாபானர்ஜி தலைமை யிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 2 நாள் தெருமுனை பிரசாரம் மற்றும் பேரணி நடத்தவிருக்கிறது.

செல்வாக்கு- சொல்வாக்கு : மார்க்., கம்யூ., கட்சியின் கிளை அங்கமான சி.ஐ.டி.யு., இன்று காலை மட்டும் வாகன ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க விருப்பதால் கட்சிகள் தங்கள் செல்வாக் கையும், சொல்வாக்கையும் பரப்பி வருகின்றனர்.பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதாக கூறியுள்ள திரிணாமுல் காங்., நாங்கள் எப்போதும் மக்கள் பக்கம் தான் என்று கூறியுள்ளது.

உயிர்ச்சேதம் இல்லை: இந்நிலையில் கோல்கட்டா அருகே மேற்கு மிட்னாபூர் மாவட்டம் பேடி சவுக், ஜார்கிராம் பகுதியில் உள்ள மார்க்., கம்யூ., அலுவலகம் தீ வைத்து கொளுத்தப் பட்டது. இதில் அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இங்கு அருகில் உள்ள சுய உதவிக்குழு அலுவலகம் இருந்த 2 மாடி கட்டடம் ஒன்று கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இன்று அதிகாலை நடந்த பயங்கரத்தில் உயிர்ச்சேதம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நக்சல்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திரிணாமுல் காங்கிரசும், மாவோயிஸ்ட்டும் ஒருவருக் கொருவர் ஆதரவும், நட்பும் பாராட்டி வரும் வேளையில் இன்று நடந்த மார்க்., கம்யூ., அலுவலகம் எரிப்பு அரசியல் ரீதியாக பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: