Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

106 அய்யப்ப பக்தர்கள் பலியாக காரணம் என்ன?முதற்கட்ட விசாரணையில் தகவல்

மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய அய்யப்ப பக்தர்களில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஆகியவற்றில் சிக்கி பலியான வர்களின் எண்ணி க்கை 106 ஆக உயர்ந் துள்ளது. இவ்விபத் துக்கு ஜீப்பும், ஆட்டோ வும் கவிழ்ந்தது தான் காரணம் என, மாவட்ட கலெக்டரின் முதற் கட்ட விசாரணை அறிக்கை யில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்திற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சபரிமலை சன்னி தானப் பகுதியில் நின்று மகரஜோதியை காண இயலாது என்பதை தெரிந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.அவர்கள் சபரி மலையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் புல்மேடு பகுதியில் காத்திருந்து, 14ம் தேதி மாலை மகரஜோதி தரிசனம் செய்தனர். இவ்வாறு அப்பகுதியில் மட்டும் இரண்டரை லட்சம் பக்தர்கள் வனப்பகுதியில் இருந்து தரிசனம் செய்தனர். இது புலிகள் நடமாடும் முழு வனாந்திர பகுதியாகும்.தரிசனத்தை முடித்துக் கொண்டு வண்டிப்பெரியாறு நோக்கி புறப்பட்ட பக்தர்கள், வனப்பகுதியில் ஒற்றை யடிப் பாதை வழியாகச் சென்றனர். மிகவும் குறுகலான அப்பகுதியில் திரளான பக்தர்கள் இரவு 8.30 மணியளவில் சென்றனர்.அப்போது, பக்தர்களை ஏற்றிச் செல்ல பல வாகனங்கள் அங்கு காத்திருந்தன. அவற்றில் ஏறிச் செல்ல பலரும் முயன்றனர். அவ்வாறு ஏற முயன்றபோது ஜீப் கவிழ்ந்து, அதன் அடியில் பலரும் சிக்கிக் கொண்டதும், அதை பார்த்து திரளானோர் நெரிசலில் சிக்கி, தள்ளு முள்ளுவில் மாட்டிக் கொண்டு கீழே விழுந்தனர்.இரவு நேரம் என்பது மட்டுமல்லாமல், கும்மிருட்டு பகுதியில் யார் கீழே கிடக் கின்றனர் என்பதே தெரியாமல் அவர்கள் மீது பலரும் மிதித்துக் கொண்டு ஓடினர். இவ்வாறு பலரும் பலியாகினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.

அடர்த்தியான வனப்பகுதியில் இருட்டாக இருந்ததால், சம்பவ இடத்தைக் கண்டுபிடிக்கவே நீண்ட நேரம் தேவைப்பட்டது. பலி யானவர்களில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தான் அதிகளவு இருந்தனர். இறந்தவர் களில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பெயர் தெரிந் திருக்கிறது.பலியானவர்களை மீட்கும் பணி நேற்று முன்தினம் காலையில் முடிந்தது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும், முதல்வர் அச்சுதானந்தன் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். பலியானவர்களின் குடும்பத் தினருக்கு இறுதிச் சடங்கிற்காக தலா 5,000 ரூபாய் வழங்கப் படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நீதி விசாரணை நடத்தப் படும் என்றும், மாநிலம் முழுவதும் மூன்று தினங்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், முதல்வரின் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்  பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன? இச்சம்பவம் குறித்து, இடுக்கி மாவட்ட கலெக்டர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட அறிக்கை, மாநில வருவாய் துறை முதன்மை செயலர் நிவேதிதா சரணிடம் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கையில், “தரிசனம் முடிந்து திரும்பிய பக்தர்கள், வனப்பகுதியில் காத்திருந்த ஆட்டோ மற்றும் ஜீப்பில் ஏறினர்.அதிகளவு பயணிகள் ஏறியதால் ஆட்டோ ஒரு பக்கமாக சரிந்தது. இதில் பலரும் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில், ஜீப்பும் கவிழ்ந்தது. அதன் அடியிலும் பலர் சிக்கினர். இதனால், அங்கிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.அதில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பலியானவர்களில் ஏழு பேர், கேரளாவைச் சேர்ந்தவர்கள்.தவிரவும், கிரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு தற்போது உத்தர விட்டிருக்கிறது. இதற்கு தலைவராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேந்திரன் இருந்து செயல்படுவார் என்றும், அவர் நான்கு நாட்களில் தன் அறிக்கையை அளிப்பார் என்றும் கூறப் பட்டது. அதேபோல, நீதி விசாரணை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்திருக்கிறது. புல்மேடு பகுதி, வனச்சரகப்பகுதி என்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டியது கேரள அரசின் பணி அல்ல என்றும் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.

நிவாரண உதவி தலா ரூ.5 லட்சம் : புல்மேடு பகுதியில் சிக்கி பலியான அய்யப்ப பக்தர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் இணைந்து தலா ஐந்து லட்ச ரூபாய், மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் ஆறு லட்ச ரூபாய் வழங்கப்படும்.மேலும், விபத்தில் காயமடைந்தவர்களில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் மாநில அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வர் கருணாநிதி, ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

59 ஆண்டுகளில் மூன்று விபத்துகள் : சபரிமலை பக்தர்கள் 225 பேர் பலி : சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் 106 பேர், புல்மேடு பகுதியில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதே போன்ற சம்பவம் இதற்கு முன், 1952ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, சபரிமலையில் வெடிகளை வெடிக்கச் செய்ய நடந்த முயற்சியில் ஏற்பட்ட விபத்தில் 66 பேர் பலியாகினர்.தொடர்ந்து, 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள், பம்பை ஹில்டாப் முகாம் பகுதியில் நெரிசலில் சிக்கி 53 பேர் பலியாயினர். தொடர்ந்து சரியாக 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோக சம்பவம், சபரிமலையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் நடந்து, 106 பேரை பலி வாங்கிவிட்டது.

அந்த ஆறு மணிநேர பயணம் லாரி டிரைவரின் துயர அனுபவம் : கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர் அனீஷ் என்பவர் கூறியதாவது: விபத்து நடந்த இடத்துக்கு சில கி.மீ., தூரத்தில் தான், நானும் வேறு சில லாரி டிரைவர்களும் நின்றிருந்தோம். விபத்து நடந்ததை கேள்விப்பட்டதும், என் லாரியை எடுத்துக் கொண்டு, விபத்து நடந்த இடத்துக்கு வேகமாக விரைந்தேன். காயம் அடைந்த பலரை, லாரியில் ஏற்றிக் கொண்டு வண்டிப்பெரியாறில் உள்ள மருத்துவ மனைக்கு விரைந்தேன். மலைப் பாதை என்பதால், லாரியை வேகமாக ஓட்ட முடியவில்லை. புல்மேடில் இருந்து, வண்டிப்பெரியாறுக்கு வருவதற்கு ஆறு மணி நேரமாகி விட்டது. காயம் பட்டு, வலியில் துடித்துக் கொண்டிருந்த பலர், தண்ணீர், தண்ணீர் என, அபயக் குரலை எழுப்பினர். பலரும் வலியால் சத்தமாக அழுதனர். அவர்களிடமிருந்த வந்த வேதனைக் குரல், என் இதயத்தை பிசைந்தது.முடிந்த அளவுக்கு வேகமாக லாரியை ஓட்டிச் சென்றேன்.

நேரம் செல்லச் செல்ல, லாரியில் இருந்து வந்த குரல்களில் சத்தம் குறைந்து கொண்டே வந்தது. பெரும்பாலானோரின் உடல்களில் அசைவுகள் இல்லை. அவர்கள் இறந்து விட்டனர் என்பது தெரிய வந்ததும், என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடிய வில்லை. வண்டிப்பெரியாறு மருத்துவமனையை நெருங்கிய போது, லாரியின் பின்னால் இருந்து வந்து கொண்டிருந்த அபயக் குரல்கள் சுத்தமாக ஓய்ந்து போனது. ஒரு சிலர் மட்டுமே, நினைவு டன் இருந்தனர். மற்றவர்கள் இறந்து விட்டனர்.புல்மேடில் இருந்து, வண்டிப்பெரியாறுக்கு வந்த, இந்த ஆறு மணி நேரப் பயணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என் வாழ்நாளில் நான் கண்ட மிகப் பெரிய துயரமான சம்பவம் இது.இவ்வாறு டிரைவர் அனீஸ் கூறினார்.

பாதுகாப்புக்கு பத்து போலீசார் மட்டுமே: மகரஜோதி தரிசனத்திற்காக புல்மேடு பகுதியில் தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பக்தர்கள் திரண்டிருக்க, அங்கு பாதுகாப்புக்கென பத்து போலீசார் மட்டுமே இருந்தனர். மேலும், அய்யப்ப பக்தர்கள் பத்தடி அகலம் கொண்ட வனப்பகுதியில் நடந்து செல்லவும், அவர்களை அடர்த்தியான வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் செல்ல அனுமதித்ததும் தவறு. அப்பகுதி புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் போதுமான போலீசாரோ, வனத் துறையினரோ பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படவில்லை. மொத்தத்தில் பத்து போலீசார் மட்டுமே அங்கு அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தனர் என, பக்தர்கள் பலரும் சோகத்துடன் தெரிவித்தனர். அடர்ந்த வனப்பகுதியில், வெளிச்சம் இல்லாத பாதையை பக்தர்கள் தேர்வு செய்ததும் தவறாகி விட்டது.

புல்மேடு நெரிசலில் காயமடைந்த பக்தர்களுக்கு தேனியில் சிகிச்சை : புல்மேடு நெரிசலில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி, கலெக்டர் முத்துவீரன், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, தி.மு.க., மாவட்ட செயலர் மூக்கையா, எம்.எல்.ஏ.,க்கள் லட்சு மணன், ராம கிருஷ்ணன் ஆகியோர் வண்டி பெரியாரில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்கள், தங்களுக்கு தமிழகத்தில் சிகிச்சை வழங்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர். இதை தொடர்ந்து வண்டிப்பெரியாரிலும், கோட்டய த்திலும் சிகிச்சை பெற்றவர்கள், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சபரிமலை ரோடுகளை அகலப்படுத்த போராட்டம் : சபரி மலைக்கு செல்லும் பாதைகளை அகலப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தப்போவதாக, ஐ.என்.டி.யு.சி., தலைவர் பி.ஏ.ஜோசப் தெரிவித் துள்ளார்.அவர் கூறுகையில், “சபரிமலையில் விபத்து நடக்கும் போது மட்டும் அழுவதில் பயனில்லை. விபத்து நடக்கும் வாய்ப்பு களை அறிந்து தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. பல முறை, அய்யப்பன் கோவிலில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவிலுக்கு சென்று வரும் பாதைகளை முழுமையாக அகலப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் இதற்கு சட்டத்தில் திருத்தம் கூட செய்யலாம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் சங்கத்தினரையும் சேர்த்துக் கொண்டு தொடர் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: