Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அருணாச்சல் திபெத்தின் தென்பகுதி: சீனா

அருணாச்சலப் பிரதேசம், திபெத்தின் தென்பகுதியே. அது ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்ற சீன நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்று, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறி யுள்ளார்.

அருணாச்சலப் பிரதே சத்தை நீண்ட காலமாக சீனா உரிமை கொண் டாடி வருகிறது. சமீ பத்தில், சீனாவின் பூஜியான் மாகாணத் தில் நடக்க இருக்கும் பளு தூக்கும் போட்டி யில் கலந்து கொள் வதற்காக, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் சீன விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந் தனர். காஷ்மீர் பகுதி வாழ் மக்களுக்கு விசா புத்தகத்தில் தனித்தாள் ஒன்றை இணைத்து அதில், விசா முத்திரையைப் பதிப்பது போல இவர்களுக்கும் தனித்தாள் விசாவை இணைத்து சீனா அளித்தது. இம்மாதிரி “ஸ்டேப்பிள்டு விசா’ தருவதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, நேற்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இந்தியாவின் கிழக்குப் பகுதி எல்லைப் பிரச்னைகள் உள்ளிட்ட இந்திய – சீன எல்லைப் பிரச்னைகளில் சீனாவின் நிலைப்பாடு எப்போதும் மாறாமலும் தெளிவாகவும் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். கடந்தாண்டு டிசம்பரில் இந்தியா வந்த சீன பிரதமர் வென் ஜியாபோ, தனித் தாள் விசா பிரச்னையை கவனிப்பதாக உறுதியளித்திருந்தார்.

இதுகுறித்து, சீன அரசின் சர்வதேச ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் ராங் யிங் கூறுகையில், “தனித்தாள் விசா வழங்குவதில் சீனா பிடிவாதமாகவே இருக்கிறது. அது தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை’ என்றார். அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் ஆலோசகரான விசால் நபாம் என்பவருக்கு கடந்த 2006ல் சீனா சுற்றுலா விசா தந்ததையும், அவர் சீனாவில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஆனால், 2007ல் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விசா தர சீனா மறுத்தது. இச்சம்பவங்களை சுட்டிக் காட்டிய இந்திய அதிகாரிகள், விசா விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து கூறுவது கடினம் தான் என்றனர்.

நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: