எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை ஒரு மாதத்தில் இருமுறை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்ததாக டீசல்,
சமையல் கியாஸ் ஆகிய வற்றின் விலையும் உயர்த் தப்பட இருக்கிறது.

இதற்கான மந்திரிகள்குழு கூட்டம் இந்தவார இறுதி யில் நடை பெற இருக்கிறது. அந்த கூட்டத்தில், டீசல் விலையை லிட்ட ருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை உயர்த்த சிபாரிசு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இதேபோல் சமையல் கியாஸ் விலையை உயர்த்தவும் மந்திரி குழு சிபாரிசு செய்யக்கூடும் என்று கருதப்படுகிறது.
இதனிடையே பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதற்கு எதிர்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நேற்று கொல்கத்தாவில் பேட்டி அளித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் ரெயில்வே மந்திரியுமான மம்தா பானர்ஜி, விலை உயர்வு குறித்து தன்னிடம் கலந்து பேசவில்லை என்று வருத்தம் தெரிவித்து இருந்தார்.
கொல்கத்தாவில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஊர்வலம் நடைபெற்றது. அதேபோல் மாநிலம் முழுவதும் வட்டார அளவிலும் கண்டன ஊர்வலங்கள் நடைபெற்றன.
அத்துடன் புதன்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பெட்ரோல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யும் படி முறையிடுகிறார்கள்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )