Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மத்திய மந்திரி சபையில் மாற்றம்

மத்திய அமைச்சரவை, இன்னும் இரண்டு நாட்களில் மாற்றம் செய்யப் படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. சரத் பவர், கபில் சிபல் ஆகியோ ருக்கு, பொறுப்பு மாறும் என்றும், ராஜா வுக்கு பதிலாக, தி.மு.க., வைச் சேர்ந்த வேறு ஒரு வருக்கு அமைச்சர வையில் இடம் அளிக்கப் படும் என்றும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

மத்திய அமைச்சரவை யில் மாற்றம் செய்யப்படலாம் என்ற செய்தி, கடந்த ஆறு மாதங்களாகவே அடிபட்டு வருகிறது. பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக, அமைச்சரவை விரிவாக் கம் நடக்க வில்லை. பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு முன் பாகவே கூட, அமைச் சரவை விரிவாக்கம் இருக்கும் என உறுதி யாக சொல்லப்பட்டது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப் படையில், காங்கிரசைச் சேர்ந்த வர்கள், கட்சிப் பொறுப்பு அல்லது ஆட்சிப் பொறுப்பு ஆகிய ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கருத்து வலியுறுத்தப் பட்டது. மத்திய அமைச்சரவையில் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், நாராயணசாமி, பிருதிவ் ராஜ் சவான் ஆகியோர் அமைச்சர்களாகவும், காங்கிரஸ் கட்சியில், அகில இந்திய பொதுச் செயலர்களாகவும் இருந்து வந்ததை அடுத்து, இந்த மாற்றம் அவசியம் எனக் கூறப்பட்டதால், அமைச்சரவை மாற்றம் நிச்சயம் இருக்கும் என நம்பப்பட்டது.ஐ.பி.எல்., சர்ச்சைக்காக, வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த சசி தரூரும், ஸ்பெக்ட்ரம் விவகாரத் திற்காக, தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராஜாவும் பதவி விலகினர். பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருந்த பிருதிவ் ராஜ் சவான், மகாராஷ்டிர முதல்வராக நியமிக்கப் பட்டார். இவர்களது இலாகாக்களை, பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். ஆலோசனை: இரண்டாம் முறையாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி யேற்று இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. ஊழல், விலைவாசி உயர்வு, சர்ச்சைகள் என, பல்வேறு விஷயங்களில் சிக்கித் தவிப் பதால், தன் அரசுக்கு, புதிய வடிவம் தருவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் விரும்பு கிறார்.

அமைச்சரவை விரிவாக்கத்தை இனியும் தள்ளிப்போட வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.இதன் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை நான்கு முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், மூன்றுமுறை தனியாகவும், ஒரு முறை சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் உடன் இருக்கவும், ஆலோசனை மேற்கொண்டார்.இதற்கிடையே, இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையில், கட்டாயம் மாற்றம் செய்யப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் உறுதியாக கூறு கின்றன. இதற்கான சூழ்நிலைகள், டில்லியில் நேற்று தென்பட்டன. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபாவை எந்த நேரத்திலும் சந்திக்கக் கூடும் என்றும் தகவல்கள் பரபரப்பாக வெளியாகின. மாற்றம்

எப்படி இருக்கும்? அமைச்சரவை மாற்றம் எப்படி இருக்கும் என்பது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக, கூடுதலாக தொலைத்தொடர்புத் துறை கொடுக்கப்பட்டது. தற்போது அவரிடம் இருந்து, மனிதவள மேம்பாட்டுத் துறை எடுக்கப்பட்டு, வேறு ஒருவருக்கு கொடுக்கப் படவுள்ளது. விவசாயம் மற்றும் உணவுத் துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார் மீது, விலைவாசி உயர்வு காரணமாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை கூறி வருகின்றன. கிரிக்கெட் தொடர்பான பணிகளில் அவர் கவனம் செலுத்து வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், உணவுத் துறை, நுகர்வோர் விவகாரம் ஆகிய பொறுப்புகளில் இருந்து, அவர் விடுவிக்கப்படுவார் என்றும், விவசாயத் துறையை மட்டும் அவர் கவனிப்பார் என்றும் தெரிகிறது. பவாரும், நீண்ட நாட்களாக தன் கூடுதல் பொறுப் புகளைக் குறைக்க விரும்பி பேட்டி அளித்ததும் உண்டு. பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேலுக்கும் பதவி உயர்வு உண்டு. ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு, வெளியுறவு இணை அமைச்சர் பதவி தரப் படவுள்ளது. சல்மான் குர்ஷித்துக்கும் முக்கிய பொறுப்பு கிடைக்கவுள்ளது.

கூட்டணி கட்சியான மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு, மேலும் ஒரு இணை அமைச்சர் பதவி தரப்படலாம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவி விலகினார். இதனால், அமைச்சரவையில் தி.மு.க.,வுக்கான ஒரு இடம் காலியாக உள்ளது. தற்போது, ராஜாவுக்கு பதிலாக தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அல்லது இளங்கோவன் ஆகிய இருவரில் ஒருவருக்கு, கேபினட் அமைச்சர் பதவி தரப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.அமைச்சரவையில் சரியாக செயல்படாத சி.பி.ஜோஷி, வீரபத்ர சிங் ஆகியோருக்கு, கல்தா கொடுக்கப் படலாம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் நிர்வாகிகளும் மாற்றம்?காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கட்டமைப்புத் துறைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இதற்கு ஒப்புக் கொண்டு விட்டதாகவே தெரிகிறது. அதன்படி மின்சாரம், இரும்பு, சாலை போக்கு வரத்து, நிலக்கரி மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளுக்கு மாற்றம் வரும் என, உறுதியாக தெரிகிறது.நகர்ப்புற மேம் பாட்டு அமைச்சராக இருக்கும் ஜெய்பால் ரெட்டியும், விளையாட்டுத்  துறை அமைச்சரான எம்.எஸ். கில்லும் காங்கிரஸ் மேலிடத்தின் கடும் அதிருப்தியில் சிக்கி யுள்ளனர். காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் சொதப்புவதற்கு இவர்கள் மீதும் காரணங்கள் கூறப்படுவதால், இவர்கள் மாற்றப் படலாம். அதே சமயம், முக்கிய இலாகாக்கள் காங்கிரசிடம் இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது.அமைச்சரவை மாற்றம் முடிந்த பின், அடுத்த ஒரு வார காலத்திற்குள் காங்கிரஸ் கட்சியிலும் புதிய நிர்வாகிகள் நியமனம் இருக்கும். அந்த புதிய நியமனங்களும் பெரிய அளவில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: