Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரணம் அடைந்த போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் மீண்டேன்”: கன்னியாஸ்திரி தகவல்

மரணம் அடைந்த போப் ஆண்டவர் ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்” என்று பிரான்ஸ் கன்னியாஸ்திரி தெரிவித் துள்ளார்.   கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு சேவை செய்து மரணம் அடைந்தவர்களின் தெய்வீக அருளால் பல அற்புதங்கள் நிகழ் வதாக நம்பப் படுகிறது. அது போன்று அற்புத ங்கள் செய் பவர்களுக்கு அருளாளர் மற்றும் புனிதர் பட்டங்கள் வழங் கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மரணம் அடைந்த போப் ஜான்பால் அற்புதங்கள் நிகழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அருளால் நோயில் இருந்து மீண்டு மறுபிறவி எடுத்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேரிசி மோன் பியேரி (49). இவர் பிரசவ வார்டில் பணிபுரிந்து வந்தார். 4 ஆண்டுகளாக இவர் பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நோய் குணமடைய வில்லை. இந்த நிலையில், தலைமை கன்னி யாஸ்திரி மேரிதாமஸ் அவரை பார்க்க வந்தார். அப்போது, மரணம் அடைந்த போப் ஆண்டவர் ஜான்பால், பெயரை பென்சிலால் எழுதி பிரார்த்தனை செய்யும்படி கூறினார்.
அதன்படி மேரியும் எழுதிவந்தார். இந்நிலையில் போப் ஆண்டவர் ஜான்பால் இறந்த 2 மாதத்தில் கன்னியாஸ்திரி மேரி சிமோன் பியேரி முழுமையாக குணம் அடைந்தார். போப் ஆண்டவர் ஜான்பாலின் கருணை மற்றும் அருளாசியினாலும் தான் நான் நோயில் இருந்து மீண்டேன். இது எனக்கு மறுபிறவி என அவர் தெரிவித்தார்.
தற்போது நான் எப்போதும் போன்று நலமாக இருக்கிறேன். எனது தசைகள் நன்றாக இயங்குகின்றன என்றும் நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.   மறைந்த போப் ஆண்டவர் ஜான்பாலுக்கு கடந்த மே 1-ந் தேதி அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. அடுத்ததாக அவர் மரணம் அடைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர் நிகழ்த்தும் அற்புதங் களை வைத்து புனிதர் பட்டம் வழங்கப்படும்.

தற்போது அற்புதங்கள் நிகழ்ந்து வருவதால் அவருக்கு விரைவில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: