Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளி யிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல் கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.

சென்ற மாதம், இதனைப் பயன் படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர் வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத் தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner)-உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் – பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூ ட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப் பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ். இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன்மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங் களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும். பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளி களுக்கு விற்பனை செய்யப்படும். இந்த வைரஸ் வரும் மின்னஞ் சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க் கிழமை தான் வெளியிடப்படும். இந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசக மும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசக மாக இருக்கும். மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோ சாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: