Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகில் புது விதம்…!

``இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக்கொண்டு பயணப்படுபவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு.
இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகி றார்கள். எனவே அதற் கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள்வது மிக முக்கியம். பணிபுரி வோர் அந்தந்த துறைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிக் கும் தகுந்தாற் போல் கூந்தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரியமான `ஹேர்கட்’ சமூகத்தில் அவர் களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.” என்கிறார், பிரபல அழகுக் கலை நிபுணர் மகாலெட்சுமி கமலக்கண்ணன்.
இவர் மறைந்த முன்னாள் தமிழக துணை அமைச்சர் ஐசரிவேலனின் மகள். கல்வியாளர் ஐசரி கணேஷின் சகோதரி. மகாலெட்சுமி தமிழக அரசு மகளிர் அழகு கலைப்பிரிவின் தேர்வாளர். மைலாப்பூரில் இயங்கும் மகா அழகுக்கலை பயிற்சி அகாடமியின் முதல்வர். பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அழகுக் கலை தொழில் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர். மலேசிய அரசு அனுமதியுடன் அங்கும் பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது வளர்ச்சியில் கணவருக்கு பெரும் பங்குண்டு.
அழகுக்கலை குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுவதால் பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், பெண்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலில் பெண்களால் அதிக வருமானமும் ஈட்ட முடியும்.” என்கிறார், மகாலெட்சுமி.
தற்போதைய கூந்தல் கலாசாரத்தைப் பற்றி அவர் விளக்குகிறார்:
“கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்’ மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயுர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை `ஸ்ட்ரைட்டனிங் தெரபி’ என்பார்கள்.
சுருள் சுருளாகவும், அலை அலையாகவும் இருக்கும் முடியை நேராக்குவதே ஸ்ட்ரைட்டனிங் தெரபி ஆகும். இவ்வாறு ஸ்ட்ரைட்டனிங் செய்த கூந்தல் நவீனமாகவும், மிருதுவாகவும், பட்டுப் போல மென்மையாகவும், பளபளப்புடனும் தோற்றமளிக்கும். கூந்தலை ஸ்ட்ரைட்டனிங் செய்து கொள்ளும் கல்லூரி மாணவிகள் ரிவர்ஸ் லாங்ஸ் டெப் கட், கேஸ்கட் கட், காஸ்மோபாலிடன் கட், ரிவர்ஸ் க்ராஜீவேஜன் கட் ஆகிய முறைகளில் கூந்தலை வெட்டிக் கொண்டால் மிகவும் அழகாக இருப்பார்கள்.
முன்பெல்லாம் பிரபலங்களும், வசதி படைத்த வர்களும் தான் கூந்தலை கலரிங் செய் வார்கள். தற்போது இந்த மோகம் அனைவரிடமும் காணப் படுகிறது. தங்களை நாகரிக தோற்றம் கொண்டவர் களாகவும், அழகிய சாதாரண மற்றும் குடும்பப் பாங்கான தோற்ற முடையவர்களாகவும் தயாராக்கிக் கொள்வதற்கு இந்த ஹேர்கலரிங் முறையை பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
இதில் 3 விதம் உள்ளது. அவை:
கிரே ஹேர் கவரேஜ் அதாவது நரைமுடியை நிறம் மாற்றுதல். குளோபல் ஹேர் கலரிங். ஹைலைட்ஸ் அல்லது ஸ்ட்ரீக்கிங் அதாவது கூந்தலை தனித் தனியாக பிரித்து வண்ணங்கள் பூசுவது.
இதுபோன்ற முறைகளில் கூந்தலுக்கு வண்ணம் தீட்டுவதால் பெண்களுக்கு மிடுக்கான தோற்றம் கிடைக்கிறது. இவ்விதமான கூந்தல் வண்ணங்களில் அல்ட்ரா வைலட் தடுப்பு பொருட்கள் இருப்பதால் அது சூரிய ஒளி முடியில் பட்டாலும் கூட, சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஹைலைட்ஸ் விரும்பி செய்து கொள் பவர்கள் ஸ்லைடிங் கட், ரேசர் வித் டிம்மர் பாயின்டிங் கட், ரேவ் கட், டீவா கட் செய்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

வீட்டில் உள்ள பெண்மணிகள் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால், உடனடியாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஒரிஜி னல் அட்டாச்சுடு ஹேர் பீஸை நிமிடத்தில் கிளிப் மாதிரி பொருத்திக் கொள்ளலாம். இது அழகு நிலையங் களுக்குச் சென்று செய்து கொண்ட கூந்தல் அலங்காரத்துக்கு இணையாக இருக்கும். நிகழ்ச்சிக்கு சிகை அலங்காரம் செய்து கொள்ளும் போது, அது எந்த மாதிரியான நிகழ்ச்சி அது காலை நேரமா அல்லது மாலை நேரமா அவரவர் வயது மற்றும் உறவு முறை ஆகியவற்றிற்கு ஏற்ப விதவிதமான கூந்தல் அலங்காரம் செய்து கொள்ளலாம்.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: