Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; வோஸ்னியாக்கி, ஹெனின் 3-வது சுற்றுக்கு

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.   உலகின் முதல்நிலை வீராங்கனையான கரோலின் வோஸ் னியாக்கி (டென்மார்க்) இன்று காலை நடந்த 2-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த வனியாசிங்கை எதிர் கொண்டார்.
இதில் வோஸ்னியாக்கி 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற் றுக்கு நுழைந்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங் கனையான ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்) 6-1, 6-3 என்ற கணக்கில் இங்கிலாந்தை சேர்ந்த எலீனாவை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் கவெட்லனா (ரஷியா), ஸ்கிப் பர்ஸ் (ரஷியா) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தனர்.  உலகின் 8-ம் நிலை வீரரான ரோட்டிக் (அமெரிக்கா) 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அவர் 7-6, (9-7), 6-2, 6-3 என்ற கணக்கில் ரஷியாவை சேர்ந்த இகோனாவை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) டாமிராபர்ட் (ஸ்பெயின்) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தன.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: