Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இ.எஸ்.ஐ.சி., நிறுவனத்தில் வேலை

பணியாளர்களின் சமூகக் காப்பீட்டிற்காக 1948 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமசோதாவின் அடிப்படையில் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இயங்கி வருவது நாம் அறிந் ததே. இந்தக் காப்பீட்டுக் குழுமத்தில் சோசியல் செக்யூரிட்டி ஆபிசர் / மேலாளர்- கிரேடு-2/ சூப்பரின் டெண்டண்ட் என்ற பிரிவுகளில் மொத்தம் 73 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக ளுக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு அரசு நிபந்தனைகளின் படி இட ஒதுக்கீடு உள்ளது. முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

வயது வரம்பு

இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷனின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.01.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். காமர்ஸ், சட்டம், நிர்வாகவியல் போன்ற பிரிவுகளில் பட்டப்
படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. அலுவலகம் தொடர்புடைய கம்ப்யூட்டர் திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.

முன்னுரிமை

ஏதாவது ஒரு அரசு நிறுவனத்திலோ அல்லது கார்ப்பரேஷனிலோ அல்லது அரசு சார்ந்த அமைப்பு களிலோ அல்லது ஷெட்யூல்டு வங்கி ஏதாவது ஒன்றிலோ மூன்று வருடப் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை

எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் மேற்கண்ட பணி இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

இ.எஸ்.ஐ.,சி., நிறுவனத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.225/-க்கு டி.டி.,யை ” E.S.I. Corporation” என்ற பெயரில் ஏதாவது ஒரு ஷெட்யூல்டு வங்கியில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் காலி யிடங்களுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரின்ட்
அவுட்டையும் டி.டி.,யுடன் தவறாமல் அனுப்ப வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.01.2011

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: