Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காவலன் பட பேனர்கள் அகற்றம்! சென்னையில் பரபரப்பு!

கலைஞர் கதை வசனத்தில் உருவான இளைஞன் பட பேனருக்கு அனுமதி அளித்துவிட்டு, விஜய் நடித்த காவலன் படத்தின் பேனர் களுக்கு போலீசார் தடை போட்டதால் சென்னையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வருமா? வராதா? என்ற நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வழி யாக பொங்கலன்று காவலன் படம் திரைக்கு வந்தது. பொங்கல் ரீலிஸ்களிலேயே காவலன்தான் பெட்டர்… என்ற விமர்சனத்துடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் காவலன் படத்தின் டிஜிட்டல் பேனர் தியேட்டர் வாசல்களில் வைக்கப் பட்டுள்ளன. சென்னை உதயம் தியேட்டர் எதிரில் சுமார் 70 அடி நீளத்திற்கு விஜய் படத்துடன் கூடிய டிஜிட் டல் பேனரை விஜய் ரசிகர்கள் வைக்க முயன்ற போது ‌போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். ஏற் கனவே பல்வேறு தடை களைத் தாண்டி திரைக்கு வந்திருக்கும் காவலன் படத்தின் பேனருக்கு போலீசார் தடை போட்ட தால் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பின்னர், விஜய் ரசிகர்கள் சாலி கிராமத்தில் இருந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஊர்லவமாக சென்று புகார் மனு கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் ஊர்வ லமாக கமிஷனர் அலுவலகத் திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அனைவரையும் கமிஷனர் அலுவலகத்துக்குள் அனுமதிக்க முடி யாது என கூறினர். பின்னர் 2 ‌பேரை மட்டும் அனுமதித்தனர். இதை யடுத்து அவர்கள் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நாங்கள் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். அவரின் ஒவ் வொரு படம் வெளியாகும் போது தியேட்டர்கள் முன்பு அவரை வாழ்த்தி பேனர்கள் வைப்பது வழக்கமான ஒன்று. வேட்டைக்காரன், சுறா படங்கள் வெளியான போதும் இந்த நடை முறையையே நாங்கள் பின் பற்றினோம். 3 நாட்கள் பேனர்கள் இருக்கலாம் என்பது தமிழக அரசின் விதிமுறை. ஆனால் நாங்கள் பேனர்களை வைக்கும்போதே போலீசார் தடுத்து விட்டனர். எங்களை பேனர்களை வைக்க விடாமல் செய்து விட்டனர். ஆனால் அருகிலேயே கலைஞரின் இளைஞன் பட பேனரை மட்டும் அவர்கள் அகற்றவில்லை. போலீசார் இதுபோன்ற நடவடிக்கை ரசிகர்களாகி எங்களை மனம் நோக வைத்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப் பட்டிருந்தது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: