தேவையான பொருட்கள்

வெங்காயம் 50g
மிளகு தூள் 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தேவையான அளவு
கறிவேப்பில்லை தேவையான அளவு
எண்ணெய் பொறிக்க
உப்பு தேவையான அளவு
பிரட் தூள் 1/2 கப்
உருளை கிழங்கு 100 g
முட்டை 1
செய்முறை:
சிக்கனை வேக வைத்து பிய்த்து வைத்து கொள்ளவும். உருளை கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். முட்டையை அடித்து வைத்து கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், சிக்கன், உருளைகிழங்கு, கொத்தமல்லி, கறிவேப் பில்லை, மிளகு தூள், மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் சிறு உருண் டைகளாக பிடித்து அடித்து வைத்த முட்டையில் போட்டு பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.
( கண்டெடுத்ததை ருசித்து படைக்கிறோம் )