Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நகம் உடையாமல் உறுதியாக வளர

தரமானநெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்விதபாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள். 

சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப் பட்டவர்கள் குளித்த வுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதி யாகும்.
நகங்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும்.
நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கால்சியம் சத்து இ ல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதி யாக இருக்கும்.
நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். நெயில் பொலிஷ் போடும் போது, பிரஷ்ஷினால், நகத்தின் அடிப் பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுகளும் இன்றி அழகாகக் காட்சியளிக்கும்.
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப் படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும். நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக் குறைபாடுகளே காரணம்.தண்ணீரை மிதமாக சூடாக்கி, சிறிது உப்புக் கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். தினம் நெயில் பொலிஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கிக் காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பொலிஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.
( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: