Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம்

மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அமைச்சர் களாக பதவியேற்றுக் கொண்டனர்.

மத்திய அமைச் சரவை இன்று மாற்றி யமைக்கப் பட்டது. அதன்படி, மத்திய நகர்ப்புறத் துறை அமைச்சராக இருந்த ஜெய்ப் பால் ரெட்டி பெட்ரோலியத்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். தகவல் தொழில் நுட்பத்துறை தொடர்ந்து கபில் சிபல் வசமே உள்ளது. அஸ்வினி குமார் திட்டம், பார்லிமென்ட் விவகாரம், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புவியியில் துறைகளை கவனிப்பார். வேணு கோபால் மின்துறையை கவனிப்பார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.கில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை யையும், அஜய் மக்கான், தனிப்பொறுப்புடன் கூடிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

தேசியவாத காங்., கட்சித்தலைவர் சரத்பவார், தொடர்ந்து விவசாயத் துறை அமைச்சராக நீடிக்கிறார். மத்திய இரும்பு துறை அமைச்சர் வீரபத்ர சிங், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்ச ராகவும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ் முக், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், கூடுதல் பொறுப்பாக பஞ்சாயத்து ராஜ் துறையையும் கவனிப்பார். மத்திய வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, விமானப் போக்குவரத்து துறையை கூடுதலாக கவனிப்பார். இதுவரை அப்பொறுப்பை கவனித்து வந்த பிரபுல் படேல், கனரக தொழில் துறைக்கு மாற்றப் படுகிறார்.

பிரபுல் படேல், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகின்றனர். அஜய் மக்கான் மற்றும் கே.வி தாமஸ் ஆகியோர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை யமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பேனி பிரசாத் வர்மா, தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். பி.கே. ஹண்டிக் கனிம வளத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். எனினும் அவரிடமிருந்த வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை தொடர்ந்து அவரிடமே இருக்கும். மத்திய ஊரகத் துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி, சாலை போக்கு வரத்து துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை குமாரி செல்ஜாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. எனினும் கலாச்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு துறை கூடுதல் பொறுப்பை அவர் கவனிப்பார். உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய், சுற்றுலாத்துறைக்கும், பார்லி மென்ட் விவகாரம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சா லிடமிருந்து நீர்வளத்துறை பறிக்கப்பட்டு, சல்மான் குர்ஷித்திடம் வழங்கப்பட்டுள்ளது. நிலக்கரித்துறை அமைச் சராக ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் பொறுப்பேற்கிறார்.

அமைச்சர்கள் பதவியேற்பு: இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், பிரதமர் மன் மோகன் சிங், காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply