Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முன் மாதிரி முதல்வர்கள்

2011 ஜனவரி மாத உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

தேர்வு ஜுரம் நெருங்குவது போல… நம் அரசியல்வாதிகளுக்கு இப்பொழுதே தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுவிட்டது. தேறு வோமா? என்ற பயத்தில் பிதற்றுகிற மாணவர்களைப் போல அரசியல் தலைவர்களும் ஏதேதோ பிதற்ற ஆரம்பித் திருக்கிறார்கள்.

தேர்வில் வெற்றி பெறுவதற்கு உழைப்பும், முனைப்பும், படிப்பும், போதும், ஆனால் தேர்தலில் வெற்றி பெற… அதிலும் நம்ம ஊர் தேர்தலில் வெற்றி பெற . . . மக்களை மயக்கத்திலாழ்த்தும் மதுவும், … சோம்பேறிகளாக்கும் இலவசங்களும், வாக்களிப் பதற்கு இலஞ்சமும், ஜாதி உணர்வும், கொள்கையற்ற கூட்டணியும் இருந்தால் போதும்.

இவையெல்லாம் இருந்தும்கூட, இன்று பல அரசியல் தலைவர்கள், தேர்தலில் தேறிவர, தலைகீழாகத் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன எந்த ஜாலங்களுமின்றி சில மாநிலங்களில் . . . சில முதல்வர்கள் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக் கிறார்கள்.

பல்வேறு கருத்துக்கணிப்புகளில் சிறந்த முதல்வராக பாராட்டப் படுபவர் குஜராத் மாநில முதல்வர் திரு. நரேந்திர மோடி, இந்து வெறியர், இஸ்லாமியர்களின் விரோதி என்று எப்பொழுதுமே எதிர் கட்சியினரால் முத்திரைக்குத்தப்பட்ட நிலையிலும், மீண்டும் . . . மீண்டும் . . . அம்மாநில முதல்வராக தேர்வு பெறுகிறாரே எப்படி?

ஒளிவு மறைவற்ற நிர்வாகம் . . . தனி ஒழுக்கம் . . . பொது வாழ்வில் நேர்மை . . . அப்பழுக்கற்ற அணுகுமுறை, மக்கள் நலனே மாநில வளம் என்ற ஒரே நோக்கத்துடனான கவனம் சிதறாத முனைப்பு இவற்றால் . . . குஜராத் மாநிலத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றியிருக்கிறார்.

பூகம்பத்தாலும், வெள்ளத்தாலும், வறட்சியாலும் வீழ்ந்து கிடந்த மாநிலப் பொருளாதாரத்தை மக்களின் வாழ்க்கைத் தரத்தை தலை நிமிர வைத்திருக்கிறார். இதற்காக இவர் சாராய வருமானத்தில் சாம்ராஜ்யம் நடத்தி . . . கமிஷன், கட்டிங், என்று திட்டங்களை செயல் படுத்தவில்லை. (காந்தி பிறந்த மண் அல்லவா), மாறாக தொழில் தொடங்க, வருபவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் எந்த ஒதுக்கீடும் இல்லாமல் வழங்கு, தொழில்துறையில் புரட்சி செய்துள்ளார். உலக அரங்கில் சிறந்த நிர்வாகியாகப் போற்றப் படுகிறார்.

இவரைப் போன்ற முன் மாதிரி முதல்வர்கள் தற்காலத்திலும் இருப்பது போற்றுதற்குரியதே!

One Comment

  • Nazir Ahmed

    MODI IS NOT THE FIRST RE-ELECTED. If you consider the message given in para 5 pl. try to apply this to all polititical personalities like Jawarlal Nehru,Jagajeevanram, Lally Prasad Yadav, Jothi Basu, Karunanidhi and many more. Defeat is something different. Think properly free from bios.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: