Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யூசுப் அதிரடி- இந்தியா திரில் வெற்றி- ஹர்பஜன் துணிச்சல் ஆட்டம்

கேப்டவுன்: பரபரப்பான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் யூசுப் பதான் அதிரடி ஆட்டம் கை கொடுக்க, இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு முறை “திரில்’ வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் பதட்டப் படாமல் “பேட்’ செய்த ஹர்பஜன், அணியின் “ஹீரோ’வாக ஜொலித்தார். தென் ஆப்ரிக்காவின் போரா ட்டம் வீணானது.

தென் ஆப்ரிக்கா சென் றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண் டாவது போட்டியில் இந்திய அணி ஒரு ரன்னில் “திரில்’ வெற்றி பெற்றது. நேற்று மூன்றாவது போட்டி, கேப்டவுனில் நடந்தது.

சச்சின் இல்லை:

இந்திய அணியில் காயமடைந்த சச்சினுக்குப் பதில் யூசுப் பதான் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் டேவிட் மில்லர் நீக்கப்பட்டு, டு பிளசிஸ் அறிமுக வீரராக இடம் பெற்றார்.”டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், “பேட்டிங்’ தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்:

ஜாகிர், முனாப் படேல் அனல் பறக்க பந்துவீச, தென் ஆப்ரிக்க அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஜாகிர் பந்தில் ஆம்லா (16) போல்டானார். ஹர்பஜன் சுழலில் விராத் கோஹ்லியின் துடிப்பான “கேட்ச்சில்’ இங்ராம் (10), வீழ்ந்தார். பின் யூசுப் பதான் வீசிய பந்தை தூக்கி அடித்த டிவிலியர்ஸ் (16), ஜாகிர் கானின் சூப்பர் “கேட்ச்சில்’ வெளியேறினார்.

ஸ்மித் திணறல்:

ஜாகிர் கான் பந்துவீச்சில் திணறிய கேப்டன் ஸ்மித் படுநிதானமாக ஆடினார். இவர் 43 (79 பந்து) ரன்களுக்கு ஹர்பஜன் சுழலில் சிக்கினார். அப்போது தென் ஆப்ரிக்க அணி 23. 2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 90 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.

பிளசிஸ் அபாரம்:

இதற்கு பின் டுமினி, டு பிளசிஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள், 5வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தனர். பிளசிஸ், ஒருநாள் அரங்கில் முதல் அரைசதம் அடித்தார். டுமினியும், தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். பிளசிஸ் 60 ரன்களுக்கு முனாப் வேகத்தில் அவுட்டானார். அடுத்து, ஜாகிர் பந்தில் டுமினி(52) போல்டாக, சிக்கல் ஏற்பட்டது. ஸ்டைன் (5), போத்தா (9) உள்ளிட்ட “டெயிலெண்டர்களும்’ ஏமாற்ற, தென் ஆப்ரிக்க அணி 49.2 ஓவரில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் ஜாகிர் கான் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

விக்கெட் மடமட:

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி, திணறல் துவக்கம் கண்டது. ஸ்டைன் பந்தில், அவரிடமே “கேட்ச்’ கொடுத்து முரளி விஜய்(1) வெளியேறினார். அடுத்து வந்த விராத் கோஹ்லி(28), பவுண்டரிகளாக அடித்த போதும், அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறாத சோகத்தில் இருந்த ரோகித் சர்மா(23), விரைவில் நடையை கட்டினார். போத்தா சுழலில் கேப்டன் தோனி(5) சிக்க, இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து தவித்தது. யுவராஜ் 16 ரன்களுக்கு அவுட்டானார்.

யூசுப் “சிக்சர்’ மழை:

இதற்கு பின் ரெய்னா, யூசுப் பதான் இணைந்து துணிச்சலாக ஆடினர். தென் ஆப்ரிக்க அணியின் “பீல்டிங்’ படுமட்டமாக அமைய, மிக எளிதாக ரன் சேர்த்தனர். சமீபத்திய ஐ.பி.எல்., ஏலத்தில் கோல்கட்டா அணிக்காக ரூ. 9.7 கோடிக்கு வாங்கப்பட்ட யூசுப் பதான் தனது திறமையை நிரூபித்தார். இவர், போத்தா வீசிய போட்டியின் 30வது ஓவரில், மூன்று இமாலய சிக்சர்கள் விளாசி, திருப்புமுனை ஏற்படுத்தினார். ரெய்னா 37 ரன்களுக்கு அவுட்டானார். சிறிது நேரத்தில், அரைசதம் கடந்த யூசுப் பதானும்(59) வெளியேற, “டென்ஷன்’ ஏற்பட்டது.

சபாஷ் ஹர்பஜன்:

பின் ஹர்பஜன், ஜாகிர் கான் சேர்ந்து போராடினர். ஜாகிர் 14 ரன்கள் எடுத்தார். பொறுப்பாக ஆடிய ஹர்பஜன், பர்னல் மற்றும் மார்கல் ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். போத்தா பந்தில் ஒரு பவுண்டரி அடித்த நெஹ்ரா, அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்பஜன்(23), நெஹ்ரா(6) அவுட்டாகாமல் இருந்தார். இவ்வெற்றியில் மூலம் இந்திய அணி, தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: