உத்தரபிரதேசத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று
லக்னோ வந்தார். அங்கு நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராகுல்காந்தி பேசிய தாவது:- தற்போது விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. என்றாலும் அதற்கு ஈடாக உத்தர பிரதேசம் போன்ற மாநில அரசுகள் செயல் படுவது இல்லை.
விலைவாசியை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதை மறந்துவிடக்கூடாது. மாநில அரசுகள், பதுக்கல் பேர்வழிகள் மீதும், அதிக விலைக்கு விற்போர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )