Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேர்ட் டிப்ஸ் : கமெண்ட் வண்ணம் மாற்ற

வேர்ட்தொகுப்பில், டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் கமெண்ட்கள் தனி வண்ணத்தில் அமைக்கப் படுகின்றன. இந்த வண்ணத்தை வேறு வண்ணத்தில் மாற்ற, வேர் ட் தொகுப் பினில் வழி இல்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாறுதல்கள் செய்து இதன் வண்ணத்தினை மாற்றலாம். அந்த வழியை இங்கு காணலாம்.

பொதுவாக, வேர்ட் டாகு மெண்ட்டில், குறிப்பிட்ட சில இடங்களில் நாம் குறிப்புகளை எழுதி அமைப்போம். மவுஸ் பாய்ண்ட்டரை, குறிப்புள்ளது என்று காட்டும் இடத்திற்குக் கொண்டு சென்றால், சிறிய பாப் அப் பாக்ஸ் காட்டப்பட்டு, அதனுடன் தொடர்புள்ள கமெண்ட் காட்டப்படும். பொதுவாக, இந்த கமெண்ட்டின் வண்ணம் இளம் மஞ்சளாக இருக்கும். இப்போது இந்த வண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால், வேர்டில் இதனை மாற்ற வழி தரப்படவில்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டம் செட்டிங்ஸில் அமைக்கப்படும் வண்ணத்தினை, வேர்ட் ஏற்றுக் கொள்கிறது.

அதற்கான வழிகள்:

1. வேர்ட் தொகுப்பினை மினிமைஸ் செய்து கொள்ளவும். மற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் திறந்திருந்தாலும், அவற்றையும் சுருக்கவும்.

2. அடுத்து, டெஸ்க்டாப் திரையில் காலியாக உள்ள ஓர் இடத்தில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் Context Menu ஒன்றைக் காட்டும்.

3. இங்கு Properties தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், விண்டோஸ் Display Properties டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Appearance என்ற டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு ஐtஞுட் கீழ் விரி மெனுவினைப் பயன்படுத்தி, கணிணி டூ கணிணி  தேர்ந்தெடுக்கவும்.

6. இங்கு கீழ்விரி மெனுவில் வலது பக்கமாக உள்ள, Color indicator என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் ஒரு சிறிய கட்டத்தினைக் காட்டும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந் தெடுக்கலாம்.

7. உங்களுக்கு எந்த வண்ணம் வேண்டுமோ, அதனைத் தேர்ந் தெடுக்கவும்.

8. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செட்டிங்ஸ் விண்டோஸ் எக்ஸ்பிக்காகத் தரப்பட்டுள்ளது. மற்ற தொகுப்புகளில் அவை காட்டும் வழிகளைப் பின்பற்றி செயல் படவும்.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: