Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

New Mobiles

ஆண்டு தோறும் உலக மொபைல் கண்காட்சியில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் புதிய மாடல்களை வர்த்தகர்களு க்கும், மக்களுக்கும் காட்டு வார்கள். அவை பன்னாட்ட ளவில் சந்தையை அடைய சில மாதங்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். இந்த ஆண்டில் இந்த கருத்தரங்கு கண்காட்சி லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வருகி றது. ஆனால் இந்திய மாநி லங்களைப் பொறுத்தவரை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வாரந்தோறும் சில மாடல்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த வாரம் வந்த இரண்டு போன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1. சாம்சங் வேவ் எஸ் 7233: 3ஜி (டேட்டா மட்டும்) வசதி கொண்ட இந்த போன், ஒரு பார் மாடல் போனாகும். 109.5 x 53.9 x 11.8மிமீ என்ற பரிமாணத்தில், 113 கிராம் எடையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. பெரிய அளவில் 3.2 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டது. இதன் கேமரா 5 எம்பி திறனுடன், டிஜிட்டல் ஸூம் மற்றும் ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் சிறப்புகளைப் பெற்றுள்ளது. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் திறன் கொண்டது.இதன் உள் நினைவகம் 19 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை உயர்த்தலாம். எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத்,எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால், 14 மணி நேரம் வரை பேசுவதற்கான திறன் தருவதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 12,500.

2. எல்.ஜி. ஜி.டி. 540 ஆப்டிமஸ்: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன், அந்த சிஸ்டத்தின் அதிக பட்ச இயக்க நன்மை தருவதாய் அமைந்துள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய அனைத்து அப்ளிகேஷன் களையும் டவுண்லோட் செய்து இயக்கலாம். இதன் உள் நினைவகம் 114 எம்.பி. நினைவகம் அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. 3 எம்பி திறன் மற்றும் டிஜிட்டல் ஸூம் கொண்ட கேமரா, எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம்.ரேடியோ, A2DP இணைந்த புளுடூத், வை-பி, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,577.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: