Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அஜித் ரசிகர்களுக்கு ஓரு நற்செய்தி

அஜீத்தை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்டநாள் கனவு. அதனை நிறைவேற்ற இருக்கிறார் அஜீத். விரைவில் தமது ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

நடிகர்களில் சற்று வித்யாசமானவர் அஜீத். தனக்கென்று ஒரு கொ‌ள் கையை வைத்துக் கொண்டு அதன்படி நடப்பவர். தமிழில் முன்னணி நடிகராக உள்ள இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் இடத்தில் மிகுந்த மரியாதை கொண்டுள்ள அஜீத்தை, சமீபத்தில் இவரது ரசிகர்கள் மிகவும் டெண்ஷன் அடைய செய்தனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில் அஜீத்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் எண்ணு கின்றனர். இதற்காக ரசிகர்கள் சிலர் ரசிகர் மன்ற தலைமை இடத்தில் கூட சொல்லாமல் அதற்கான வேலை களை செய்து வந்தனர். இது அஜீத்தை மிகவும் வெறுப்படைய செய்தது. இதுபோன்று தேவை யில்லாத வேலைகளில் ஈடுபட்டால் ரசிகர்மன்றத்தை கலைத்து விடுவேன் என்று எச்சரிக்கை செய்தார். அதுமட்டுல்லாது ரசிகர்களை சந்திப் பதையும் பெரிதும் தவிர்த்து வந்தார் அஜீத். இது அவர்களை மனதளவில் பாதிப்படையச் செய்தது.

இந்நிலையில் ரசிகர்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்ற இருக்கிறார் அஜீத். மங்காத்தா படத்தை முடித்த பின்னர் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு நேரடி யாக சென்று தமது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். அப்படின்னா இது நற்செய்தி தானே.

தற்போது மங்காத்தா படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தபடம் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளில் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: