Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கறுப்பு பண பிரச்சினை: உடனடி தீர்வு இல்லை: மன்மோகன்சிங்

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடை பெற்ற புதிய மத்திய மந்திரி கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மன் மோகன் சிங் கலந்து கொண்டார். பதவி யேற்பு விழா வுக்குப்  பின் பிரதமர் மன் மோகன் சிங் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.
மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “சிறிய அளவில்தான் மந்திரிசபை மாற்றம் தற்போது நடந்து ள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தபின் இதை விட விரி வான அளவில் மந்திரிசபையில் மாற்றம் இருக்கும்” என்று தெரிவித்தார்.
கறுப்பு பண முதலைகளின் பட்டியலை வெளியிட மறுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மன்மோகன்சிங் கூறுகையில், “வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வருவதற்கு உடனடி திடீர் தீர்வு எதுவும் இல்லை. இந்த வங்கி கணக்குகள் தொடர்பாக உரிய வரியை வசூலிப்பதற் காக சில தகவல்கள் மத்திய அரசுக்கு கிடைத்து உள்ளன என்று கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: