Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: நண்டு ரசம்

தேவையான பொருட்கள்
நண்டு கால்கள் – 10
புளி – எலுமிச்சை அளவு
முழு பூண்டு – 1
ரசப்பொடி – 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4 கொத்துமல்லி
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, எண்ணை – தாளிக்க
செய்முறை
நண்டு ரசம்

நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை ரசத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க விடுங்கள். புளிக்கரைசலில் நண்டுகால்கள், ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பூண்டு விழுது ஆகியவற்றைப் போடவும் வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்த வுடன் கடுகைப் போடவும். காய்ந்த மிளகாய்களை கிள்ளிப் போடவும்.தாளித்ததை புளிக் கரைசலில் கொட்டி கொதிக்க வைக்கவும். நண்டு வெந்து ரசம் கொதித்ததும் கொத்து மல்லி, கறிவேப்பிலை தழைகளைப் போட்டு இறக்கினால் நண்டு ரசம் தயார்.

( கண்டெடுத்ததை ருசித்து படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: