டீசல் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் இழப்பு இருந்தும் தற்போது டீசல் விலையை உயர்த்தும் எண்ணம்
இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் எஸ். ஜெய் பால் ரெட்டி கூறினார்.
இன்று பெட்ரோலியத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
டீசல் விலை உயர்த்துவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. தற்போது உள்ள விலையே தொடர்ந்து நீடிக்கும். கடந்த ஜுன் 2010 முதல் பெட்ரோல் விலை 7 முறை உயர்த்தப் பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் விலையை குறைக்கும் எண்ணம் தற்போது இல்லை.
மூன்று மாநிலங்களில் எரிவாயு விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தில் இருந்து நான் பெட்ரோலியத் துறைக்கு புதியதாக மாற்றப்பட்டுள்ளேனே தவிர, இது புதிய அரசு அல்ல. பழைய அரசுதான். எல்லாத்துறைகளில் நடக்கும் அனைத்து செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் தெரியும். எந்த முடிவையும் அனைவரும் கலந்தாலோசித்துதான் எடுப்போம். எரிவாயு விலையை நிர்ணயம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. இதன் சர்வதேச விலை பெரும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார். மேலும் எரி வாயுகளில் நிறுவனங்களுக்கு தற்போது ஏற்படும் இழப்பையும் அவர் பட்டியலிட்டார்.
1 லிட்டர் பெட்ரோலுக்கு 1.22 ரூபாய்
1 லிட்டர் டீசலுக்கு 7 ரூபாய்
1 லிட்டர் மண்ணெண்னைக்கு 19.60 ரூபாய்
1 எரிவாயு சிலிண்டருக்கு 366.28 ரூபாய்
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )