Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 28-ந்தேதி பட்ஜெட் தாக்கல்; மத்திய அரசு

புதிய மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதை யடுத்து இன்று பிரதமர் மன் மோகன்சிங் தலைமை யில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற பிப்ரவரி 21-ந்தேதி பட்ஜெட் கூட்டம் நாடாளு மன்றத்தில் தொடங்கயிருப் பது அறிவி க்கப்பட்டது. இதை தொடர்ந்து 25-ந்தேதி இரயில்வே பட்ஜெட்டும், 28-ந் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப் படும்.
பட்ஜெட்டிற்கென தனியே நடைப்பெற்ற  சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்துக் கொண்டார். இக்கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி தலைமை தாங்கினார். பின்னர் நாடாளுமன்ற அலுவல் அமைச்சர் பி.கே. பன்சால் நிருபர்களிடம் கூறியதாவது:-
இப்போது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தின் தேதி மற்றும் பட்ஜெட் தாக்கலின் தேதி ஆகியவை முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தொடர்பான பிற பணிகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.   21-ந்தேதி பட்ஜெட் கூட்த்தின் தொடக்க உரையை குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல், இரு அவை உறுப்பினர்கள் முன் பேசுவார். அவரின் உரை, வர விருக்கும் நிதி ஆண்டின் அரசு திட்டங்களை பற்றி இருக்கும். இவ்வாறு பன்சால் கூறினார்.
பட்ஜெட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, வெளிநாடு வாழ் இந்திய அமைச்சர் வயலார் ரவி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, ஜவுளி அமைச்சர் தாயாநிதி மாறன், நாடாளுமன்ற அலுவல்கள் இணையமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: