Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நியுரோதெரபியின் சிகிச்சை முறை என்ன?

இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறையாலும்,மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கத்தாலும், காலம் தவறிய உணவுமுறை களாலும் நோயை நாமே உடம்பிற்குள் உற்பத்தி செய்து கொள்கிறோம்.

நோய்க்குத் தகுந்த உடல் உறுப்புக் களைக் கண்டறிந்து,அதன் நரம்பு மற்றும் ரத்த நாளங்களைத் தூண்டி விடுவதன் மூலம் உடலின் ஆற்றலை மீட்டுத் தரச் செய்வதே நியூரோ தெரபியின் சிறப்புக்குறிக்கோளாகும்.

உங்கள் உடலே உங்களுக்கு மருந்து என்ற வாக்கியத்தின்படி நியூரோதெரபி சிகிச்சையில் அழுத்தம் உடலுக்குத் தரப் படுகிறது. இந்த சிகிச்சையில் உடலில் உயிர் ரசாயன ஆற்றலை நிலைப்படுத்தி நோய் முற்றிலும் நீக்கப் படுகிறது.

நோய் வருவதற்கான காரணிகள்:

உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் சுரப்பதால் நோய் உண்டாகிறது.

வயிறு செரிக்காமை (சரியான நேரத்தில் சாப்பிடாதது, கண்டதையும் சாப்பிடுவது)

வாத, பித்தம் சமன்பாடு இல்லாமை (சித்த வைத்தியத்தின் ஆதாரக் கொள்கையே இதுதான்)

நோய்த் தொற்று,நோய் அழற்சி,வீக்கம்(Infection,inflammation)

நியுரோதெரபி மூலம் குணமாக்கப்படும் நோய்கள்:

அலர்ஜி,அல்சர்,கண் நோய்கள், ஆஸ்துமா, மூட்டுவலி எனப்படும் ஆர்த்ரைடீஸ், இதய நோய், ஊளைச்சதை(எடை குறைத்தல்)
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு, புற்றுநோய், திக்குவாய்,சிறுநீரகக் கோளாறுகள், மன அழுத்தம்,போலிக் ஆசிட் குறைபாடு, உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம், தூக்கமின்மை எனப்படும் இன்சோமியா,ஆட்டிசம் எனப்படும் மூளை மற்றும் நரம்பியல் குறைபாடு, வலிப்பு,கல்லீரல் நோய்கள்,பக்கவாதம், மூல நோய், பெண்களின் கர்ப்பப்பை பிரச்னை மற்றும் மாத விடாய் பிரச்னைகள், குழந்தையின்மை

நியூரோதெரபியால் எந்த வித மாத்திரை,மருந்துகளும் தரப் படுவதில்லை. நோய் நிரந்தரமாகக் குணமடைகிறது. பின் விளைவு, பக்க விளைவு இல்லை.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சிகிச்சை முறையாகும்.

மேலும் விபரங்களுக்கு www.dlmnt.org


டாக்டர் பா.விஜய் ஆனந்த் அவர்களின் மின் அஞ்சல் முகவரி:nerovijay@yahoo.co.in

 

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்தது  )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: