Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அசத்தலான அறிவியல் உண்மைகள்

வீட்டோடு முழுநேரமாகத் தங்கிக் குழந்தை களைப் பார்த்துக் கொள்ளும் தாதிகளை விடப் பகுதி நேரமாக வந்து போகிற தாதிகளிடம் குழந்தைகள் அதிக ஆரோக்கியமாக வளர்வதாக கண்டறிந் துள்ளனர் ஆhஸ்திரேலியா ஆய்வாள ர்கள். காரணம், பகுதி நேர தாதியர் முழு நேரத்தினரை விடக்குறைவான நேரமே குழந்தைகளைத் தொலைக் காட்சி பார்க் கவும், கண்ட கண்ட நொறுக்குத் தீனிகளைத் தின்னவும் அனுமதிப் பது தானாம். பள்ளிப் பருவத்துக்கு முந்தைய 4500 குழந்தைகளைப் பலநாள் கண்காணித்து ஆய்வு செய்து அவர்கள் இதனை அறிந்து கூறியுள்ளனர்.

* வயாகரா என்றதும் முகம் சுளிக்காதீர்கள். அதுவொரு ஆண் தன்மையைக் கூட்டவல்ல பாலியல் ஊக்க மருந்துதான். என்றாலும், பல்வேறு உடல்குறைகளோடு பிறந்த ஒரு குழந்தை யை அதுதான் இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக் கிறது. அச்சிறுவன் பெயர் ஓவென்  ப்ளூம்ஃபீல்டு. வயது மூன்றரை வாரம்.

அவன் பிறக்கும்போது வயிறு மார்பில் இருந்தது. இதயத்தில் ஓட்டை, நுரையீரலிலும் அரிதான ஒழுங்கற்ற குறைபாடு. அறுவை சிகிச்சைமூலம் அவற்றைச் சரி செய்தனர். இருப்பினும் நுரையீரல் கோளாறு நாளடைவில்தான் சரியாகுமாம். அது வரையில் வயாகராவே துணை. அப்படிச் சரியாகாவிட்டால் ஆயுள் முழுவதும் வயாகராவேதான் கதி என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

* கடவுளிடமான நமது முறையீடுகளை ஒரு தாளில் எழுதி “வெஸ்டர்ஸ் வான்’ மேற்குச் சுவரில் வைப்பது ஜெருசலேம் மக்களின் வழக்கம்.

அதிலும் இப்போது நவீன நெட்வொர்க் சேவை புகுந்துவிட்டது. இஸ்ரேல் பல்கலைக்கழக டெல்அவிவ் மாணவர் அஸோன்நிர் என்பவர் தனது கணினியில் www.twitter.com/thekotel என்ற பெயரிலான வலைத்தளம் ஒன்றைத் திறந்துள்ளார். அதற்கு வரும் கடவுளுக்கான கிறீச்சீடு அதாவது, டுவிட்டர் செய்திகளை அச்சிட்டு எடுத்துச் சென்று அனுப்புவோர் சார்பில் அவர் மேற்குச் சுவரில் வைக்கிறார். இதுவரையில் ஆயிரத்துக்கும் மேலான கிறீச்சீட்டு செய்திச் சுருள்களை அங்கு வைத்து விட்டார். ஒரு கிறீச்சீடு 140 எழுத்துக்கள் வரையில்தான் இருக்க வேண்டுமாம்.

* தங்கமுலாம் பூசப்பட்ட நுண்ணிய சென்சார் ஒன்றை ஒரு முறை மனிதனின் செல்லுக்குள் பொருத்திவிட்டால் போதும் அது வெளிப் படுத்தும் லேசர் ஒளி செல்லின் நுண்ணறிவில் பாய்ந்து மீண்டும் வெளிப் படும். இந்த உள் வெளி அசைவு செல் புரோட்டீனில் ஏற்படுத்தும் அதிர்வைக் கொண்டு ஒருவருக்கு உள்ள நோயைக் கண்டறிவதோடு, அந்நோயின் வளர்ச்சி பற்றியும் கணிக்க முடியும் என்கிறார் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கோலின் கேம்ப்பெல் என்ற பிரிட்டன் நாட்டு ஆராய்ச்சியாளர்.

அணுசக்தி ரியாக்டரிலிருந்து வெளிப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் கதிர் வீச்சை உள்ளுக்குள்ளேயே கட்டுப்படுத்தி, ஏதேனும் பழுதிருந்தால் தானாகவே சரிசெய்து கொண்டு, பிற்பாடு வெளிப் பரவலை ஏற்படுத்தும் பொருள் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். (இது பற்றி இதற்கு முன்பு அறிந்திராத) அமெரிக்க அணு விஞ்ஞானிகள். இனி புதிதாக அமைக்கப்படும் அணுமின் நிலைங்கள் அமைக்க இந்தப் பாதுகாப்பான புதிய தலைமுறைக் கதிர்வீச்சுக் கட்டுப்பாட்டுப் பொருள் உதவும் என்கின்றனர் அவர்கள்.

* பிராணிகள் தாவரத்தை உண்ணும். ஆனால் பிராணியை உண்ணும் தாவரம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். பிரிட்டன் விஞ்ஞானிகள். பெரிய கூஜா வடிவப் புதர்ச்செடியின் அகல மான, உள்ளிறங்கும் வாய்போன்ற உறுப்பு உட்புறம் வழுவழுப்பாக இருப்பதால் அங்கு வந்து அமரம் எலி போன்ற சிறு பிராணிகள் வழுக்கிக்கொண்டு தாவரத்தினுள் சென்று விடு கின்றன. உடனே, அங்கு சுரக்கும் திரவ என்சைம் எலியை ஜீரணித்து விடும். இவ்வகைச் செடியை பிலிப்பை ன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப் பிரதேசத்தில் கண்டு பிடித்துள்ளனர். அத்தாவரத்துக்கு வனஉயிர் இனங்கள் பற்றிய ஒலிபரப்பில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவரான டேவிட் ஆட்டன் பர்ரோக் என்பவரின் இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

* தினமும் ஒரு ஆப்பிள் தின்றால் டாக்டருக்கு வேலையில்லை என்பார்கள். இப்போது அப்பழக்கம் இருந்தால் பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகமிகக்குறைவு என்கின்றனர் பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். மற்ற பழங்கள் உண்பவர்களுக்கு இத்தகைய பலன் இருப்பதில்லையாம். அதற்குக் காரணம் ஆப்பிள் பழத்தோலில் அதிகமாக காணப் படும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் என்கிறார்கள். ஆப்பிள் சாப்பி டுவது உடலுக்கு நல்லது. அதைவிட நல்லது தோலைச் சீவி எறியாமல் தொடர்ந்து தினசரி தோலோடு சாப்பிடுவது. அது பெருங் குடல் புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: