Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அவள் சுமங்கலியா என்று கேள்? (காஞ்சி பெரியவர் தன் சீடரிடம் கேட்கச்சொன்னது)

ஒருமுறை மகாபெரியவரின் தரி சனத்திற்காக காஞ்சி மடத்தில் பக்தர்கள் கூடியிருந்தனர். பெரி யவர்வந்து அமர்ந்தவுடன் வழக்கம் போல் எல்லோரும் வரிசையில் சென்று வந்தனம் செய்து அவரிடம் ஆசி பெற்றுச் சென்று கொண்டிருந் தனர். அப்போது ஒரு ஓரமாக முக் காடிட்ட விதவைப் பாட்டி ஒருவர் நிற்பதை கவனித்த பெரியவர், அருகிலிருந்த சிஷ்யன் ஒரு வனைக் கூப்பிட்டு, இந்த பாட்டி சுமங்கலியா என்று கேட்டு வந்து சொல் என்றவுடன் அந்த சிஷ்யன் பேந்தப் பேந்த விழித்தான்.

முக்காடு போட்டிருக்கும் பாட்டி யை சுமங்கலியா என்று எப்படிக் கேட்பது என்று திகைத்தான்! ஆனால் பெரியவர் விடவில்லை; அவனை விரட்டிக் கொண்டே இருந்தார். உடல் நடுங்க, மிக்க தயக்கத் துடன் அவன் அந்தப் பாட்டியை அணுகி, “”தாங்கள் சுமங்கலியா என்று பெரியவர் கேட்கிறார்” என்று கேட்பதற்குள் அவன் உடல் வியர்வை யால் நனைந்துவிட்டது! பெரியவர் கேட்ட கேள்விக்கு பாட்டி பதில் கூறினதும், அந்த சிஷ்யன் மயக்கம் போட்டு விழாத குறை! அந்தப் பாட்டி என்ன பதில் சொன்னார் தெரியுமா? “”ஆமாம், நான் சுமங்கலி தான்!”  இதைக் கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

திரும்பி வந்த சிஷ்யன் பாட்டியின் பதிலைக் கூறவே, பெரியவர் பாட்டியை பதிலை கூறவே, பெரியவர் பாட்டியை உடனே அருகில் வரச் சொல்லி ஏதோ விசாரித்து விட்டு பிரசாதம் கொடுத்த வுடன் பாட்டியும் அங்கிருந்து வெளியே போய்விட்டார்.

இந்நிகழ்ச்சியை உன்னிப்பாகவும், ஆர்வமுடனும் கவனித்துக் கொண்டிருந் தவர்களை பெரியவர் பார்த்து விளக்கம் கொடுத்தது எல்லோருக்கும் வியப்பை அளித்ததோடு வேடிக்கையாகவும் தென் பட்டது. எப்படித் தெரியுமா?

“”நான் அந்தப் பாட்டியை சுமங்கலியா என்று கேட்டு வரச் சொன்னேன். பாட்டியும் ஆமாம் என்றார். இது எப்படி என்று உங்களுக்கு புரியாது என்று எனக்கு தெரியும். சுமங்கலி என்பது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தை சேர்ந்தவரே அந்தப் பாட்டி! இதைத்தான் விசாரித்தேன்” என்று பெரியவர் விளக்கவும், அங்கு எழுந்த சிரிப்பு அலை லேசில் அடங்கவில்லை!

( இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: